கம்பராமாயணம் 10345 · யுத்த 37.332
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1தோன்றிய பரதனைத் தொழுது தொல் அறச்
சான்று என நின்ற நின் இளைய தம்பியை
வான்தொடர் பேரரசு ஆண்ட மன்னனை
ஈன்றவள் பகைஞனைக் காண்டி ஈண்டு ‘எனா.
பொருள் · Meaning in Tamil
தொல் அறச்சான்று என நின்றவன் - பழமையான அறத்துக்குச் சாட்சியாக உள்ளவனாகிய அநுமான்; தோன்றிய பரதனைத் தொழுது - அங்கே வந்த பரதனை வணங்கி (இராமனுக்கு), இனைய தம்பியை - இத்தகைய உடன்பிறப்பை, வான் தொடர் பேரரசு ஆண்ட மன்னனை - மிக உயர்ந்த பாரம்பரியம் உள்ள பெரிய சூரிய குல ஆட்சி செய்த அரசனை; ஈன்றவள் பகைஞனை - பெற்ற தாயாகிய கைகேயிக்கு எதிரியாக இருந்தவனை; ஈண்டு காண்டி - இங்கே காண்பாயாக; எனா - என்று; தொடரும்
ஆங்கிலம் · English translationAI
Translation
- Bowing to Paratan as he appeared, he who stood as a witness of ancient dharma
- said: “Here is your brother —
- the king who ruled the great kingdom whose line reaches to the sky,
- the enemy of the woman who bore him — see him here,”
What the poem says
Aṉumaṉ, a living witness to righteousness, bows to Paratan and presents him to Irāmaṉ: this is the brother who held the great ancestral kingdom in trust and who turned against his own mother Kaikēyi for Irāmaṉ's sake. The sentence continues into the next verse.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tōṉṟiya parataṉait toḻutu tol aṟac
cāṉṟu eṉa niṉṟavaṉ iṉaiya tampiyai
vāṉ toṭar pēraracu āṇṭa maṉṉaṉai
īṉṟavaḷ pakaiñaṉaik kāṇṭi īṇṭu ‘eṉā.