கம்பராமாயணம் 10344 · யுத்த 37.331
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பாடு உறு பெரும் புகழ்ப் பரதன் - பெருமை பொருந்திய சிறந்த புகழை உடைய பரதன்; ஈடு உறு வான் துணை இராமன் சேவடி - தனக்குத்தானே சமானமாய சிறந்த துணையாக உள்ள இராமன் திருவடி நிலைகளை; சூடிய சென்னியன் - சென்னி மேல் அணிந்து கொண்டவனாய்; தொழுத கையினன் - கைகளால் வணங்கிக் கொண்டு; ஊடு உயிர் உண்டு என உலர்ந்த யாக்கையன் - உள்ளே உயிரும் இருக்கிறது என்று கண்டார் கருதலாம்படி வற்றிப் போன உடம்புடையவனாக; தோன்றினான் - (இராமன் முன்னாலே) வந்தான்.
இராமன்பால் முன்பு பெற்ற பாதுகைகளைத் தலை மேற் சூடி வந்தான் என்பதாகும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With Irāmaṉ's red feet, his peerless great support,
- worn upon his head, with hands joined in worship,
- his body so wasted that one could only guess life was still within,
- Paratan of great and glorious fame appeared.
What the poem says
Paratan comes before Irāmaṉ carrying on his head the sandals Irāmaṉ gave him fourteen years before, which he has ruled under ever since. His hands are folded in worship and his body is so wasted by penance that one can barely tell he is alive.