கம்பராமாயணம் 10343 · யுத்த 37.330
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
என்று உரைத்து - என்று இவ்வாறு கூறி; குன்று இணைத்தன உயர் குவவுத் தோளினான் - இரண்டு குன்றுகள் நெருங்கினாற் போன்ற உயர்ந்து திரண்ட தோளினை உடைய இராமன்; அனுமனை இறுகப் புல்லினான் - அனுமனை நன்கு தழுவி; உனக்கும் எந்தைக்கும் இன்துணைத் தம்பிக்கும் யாய்க்கும் - அனுமனாகிய உனக்கும், சத்திய வாகனெராகிய தசரத சக்கரவர்த்திக்கும் என்னை உடன் பிரியாத இனிய துணையாகிய இலக்குவனுக்கும் தாயாகிய கோசலைக்கும்; ஒன்று உரைத்து இறுப்பது என் - நன்றியாக ஒரு வார்த்தை சொல்லி முடிப்பது எவ்வாறு இயலும்? என்றனன்;
தம்பி என்பது பரதன் என்பாரும் உளர் - இன்துணைத் தம்பி என்பது இலக்குவனைக் குறித்தலே சிறந்ததாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Saying this, he held Aṉumaṉ tight in his embrace:
- “What can I say to repay my debt — to you, to my father,
- to my sweet companion of a brother, and to my mother?” said
- he whose high, rounded shoulders were like two hills joined.
What the poem says
Irāmaṉ hugs Aṉumaṉ and says no words of his could repay what he owes to four: Aṉumaṉ, his father Tacarataṉ, his devoted brother and his mother Kōcalai. Some take "brother" to mean Paratan, but "sweet companion" fits Ilakkuvaṉ, who never left his side, better.