கம்பராமாயணம் 10342 · யுத்த 37.329

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தீவினை யாம் பல செய்யத் தீர்வு இலா
வீ வினை முறை முறை விளைவ மெய்ம்மையால்;
நீ அவை துடைத்து நின்று அளிக்க நேர்ந்ததால்
யாயினும் அன்பினாய்! யாம் செய் மாதவம்.

பொருள் · Meaning in Tamil

மெய்ம்மையாய்! - உண்மையின் வடிவமானவனே!; ஆயினும் அன்பினாய் - தாயைக் காட்டிலும் பேரன்புடையவனே!; யாம் பல தீவினை செய்ய - நாங்கள் பல தீய செயல்களைச் செய்ய, தீர்வு இலா வீவினை முறை முறை விளைவ - அச்செயல்கள் நீங்காமல் கெடுதிகளை முறை முறையாகத் தோற்றுவிப்பனவாயின; நீ அவை துடைத்து நின்று அழிக்க நேர்ந்தது - அனுமனாகிய நீ அத்தீமைகளை அடியோடு அழித்துப் போக்கும்படி ஆகியது; யாம் செய் மாதவம் - நாங்கள் செய்த புண்ணியப் பயனாலே ஆகும். (தொடரும்)

"தீயவை செய்தார் கெடுதல் நிழல் தன்னை, வீயாது அடி உறைந்தற்று” என்னும் குறள் (208) பல தீவினைசெய்ய தீர்வு இலா வீவினை முறை முறை விளைவ” என்னும் அடிகளில் அமைந்திருத்தல் காண்க. ஆல் - அசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “We did many evil deeds, and ruin with no end
  2. came of them again and again, O you who are truth itself;
  3. that you should wipe them away and stand there destroying them
  4. is the fruit of great penance we did, you who love us more than a mother!”

What the poem says

Irāmaṉ answers Aṉumaṉ with deep gratitude. Through their own past wrongdoing, he says, disasters kept falling on his family one after another; that Aṉumaṉ came and undid them all, most recently by saving Paratan, can only be the reward of some great merit they had earned. The thought echoes a Tirukkuṟaḷ couplet (208): ruin follows evildoers as closely as their own shadow. The speech continues.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tīviṉai yām pala ceyyat tīrvu ilā
vīviṉai muṟai muṟai viḷaiva meymmaiyāy;
nī avai tuṭaittu niṉṟu aḻikka nērntatāl
āyiṉum aṉpiṉāy! yām cey mātavam.