கம்பராமாயணம் 10341 · யுத்த 37.328

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1உருப்பு அவிர் கனலிடை ஒளிக்கல் உற்ற இப்
பொருப்பு அவிர் தோளனைப் பொருந்தி, நாயினேன்,
திருப்பொலி மார்ப! நின் வரவு செப்பினேன்;
இருப்பன ஆயின உலகம் யாவையும்.

பொருள் · Meaning in Tamil

திருப்பொலி மார்ப! - திருமகள் தங்கிய மார்பை உடையவனே; நாயினேன் - அடியேன்; உருப்பு அவிர் கனலிடை ஒளிக்கல் உற்ற அப் பொருப்பு அவிர் தோளனைப் பொருந்தி - வெப்பம் விளங்கும் நெருப்பின்கண் விழுந்து உயிர் துறக்கலுற்ற அந்த மலைபோல் விளங்கும் தோள் உடைய பரதனைச் சென்றடைந்து; நின் வரவு செப்பினேன் - நின்னுடைய வருகையைச் சொன்னேன்; (அதனால் அவன் நெருப்பின் கண் விழாதொழிந்தான் ஆகவே) உலகம் யாவையும் இருப்பன ஆயின - உலகம் எல்லாம் உயிர்பெற்று வாழ்வனவாயின.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “He of the mountain-bright shoulders, who was about to vanish into the blazing fire —
  2. I, your dog, reached him,
  3. and told him of your coming, O you whose chest glows with Tiru;
  4. and so all the worlds have been kept alive.”

What the poem says

Aṉumaṉ reports to Irāmaṉ: he reached Paratan just as he was about to throw himself into the fire, and told him Irāmaṉ was coming. Because Paratan lived, the whole world, which would have perished with him, lives too.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1uruppu avir kaṉaliṭai oḷikkal uṟṟa ap
poruppu avir tōḷaṉaip porunti, nāyiṉēṉ,
tirup poli mārpa! niṉ varavu ceppiṉēṉ;
iruppaṉa āyiṉa ulakam yāvaiyum.