கம்பராமாயணம் 10349 · யுத்த 37.336
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
(இராமன்) தாயருக்கு - தன்னைப் பிரிந்த தாய்மார்களுக்கு; அன்று சார்ந்த கன்று எனும் தகையன் ஆனான் - பிரிந்து உடனே வந்தடைந்த கன்றின் தன்மையை ஒத்தவனாக ஆனான்; மாயையின் பிரிந்தோர்க்கு எல்லாம் - அவித்தையாகிய அஞ்ஞானம் நீங்கிய மெய்ஞ்ஞானிகளுக்கு எல்லாம்; மனோலயம் வந்தது ஒத்தான் - மனம் லயிக்குமிடமாகிய பரப்பிரம்மத்தோடு ஒன்றுபடும் தன்மை வந்து சேர்ந்தாற்போல் ஆனான்; ஆய் இளையார்க்குக் கண்ணுள் ஆடு இரும்பாவை ஆனான் - தன் பிரிவால் மெலிந்து நுணுகிய பரத சத்துருக்கனராய தம்பிமார்களுக்கு அவர்கள் கண்ணிற் கருமணியாம் பாவையாக ஆனான். (மற்றவர்களுக்கு எல்லாம்) நோய் உறுத்து உலந்த யாக்கைக்கு உயிர் புகுந்தாலும் ஒத்தான் - நோய் துன்புறுத்த அதனால் வற்றிப் போன உடம்பிற்குள் மீண்டும் உயிர்வந்து புகுந்தாற் போலும் தன்மையாக ஆனான்.
'கன்று பிரி காரா' (கம்ப. 23067) என்பது இராமனைப் பிரிந்த தாயர் நிலைக்கு முன்னும் கூறப்பட்டது. 'மாயையின் பிரிந்தார்க்கு' என்பதற்கு மாயையிலிருந்து நீங்கியவர்களுக்கு என்று நீக்கப் பொருள் கூறாமல் 'மாயையால்' என ஏதுப் பொருள் கொண்டு, மாயையால் பிரமத்தை விட்டுப் பிரிந்தவர்கள் மீண்டும் பிரமத்தோடு கூடியது போல் என அத்வைத வேதாந்தப் பொருள் கூறல் மிகவும் பொருந்தும் என்பது என் குருநாதர் மகாவித்துவான் மயிலம், வே. சிவசுப்பிரமணியம் கருத்து. 'மனோலயம்' என்பது மனமற்ற இடம் என்பதாக பரப்பிரம்ம எனப் பொருள் தந்து 'முத்தி நிலை' குறித்தது. 'ஆய் நுணுக்கம்' ” ஆய்தல் ஓய்தல் நிகழ்த்தல் சாய் ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம்” என்பது தொல்காப்பியம். (தொல். சொல். 25)
ஆங்கிலம் · English translationAI
Translation
- To his mothers he was like a calf returned that very day;
- to all those parted by illusion he was like the mind's absorption come at last;
- to his worn younger brothers he became the dark pupil dancing in their eyes;
- he was like life entering a body wasted away by sickness.
What the poem says
Irāmaṉ, now on the ground, is greeted by everyone, and each sees him differently. To his mothers he is a lost calf come home; to sages he is like the mind's final union with the Absolute. One reading takes "parted by illusion" in the Advaita sense: souls separated from Brahman by māyā rejoining it. To his brothers, thin with grief, he is the apple of their eye; to everyone else he is life returning to a body wasted by illness.