கம்பராமாயணம் 10350 · யுத்த 37.337
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
எளிவரும் உயிர்கட்கு எல்லாம் - எளிமை நிலையடைந்த உயிர்களுக்கு எல்லாம்; ஈன்ற தாய் எதிர்ந்தது ஒத்தான் - பெற்ற அன்னை வந்து கிடைத்தது போல ஆனான்; அளி வரும் மனத்தோர்க்கு எல்லாம் அரும் பத அமுதம் ஆனான் - அன்பு பொருந்திய மனம் உடையவர்களுக்கெல்லாம் கிடைத்தற்கரிய தேவர் அமுதம் கிடைத்தாற் போன்றவனாக ஆனான்; உலகினுக்கு ஒளி வரப் பிறந்தது ஒத்தான் - உலகத்திற்கு இருளை நீக்கி ஒளி தோன்றியது போல ஆனான்; ஒண் கணார்க்குத் தெளிவு அருங்களிப்பு நல்கும் தேம்பிழித் தேறல் ஒத்தான் - ஒள்ளிய கண்களை உடைய மகளிர்க்குத் தெளிவற்ற மயக்கச்செருக்கு தருகின்ற தேனினது பிழிந்த தெளிவைப் போன்றான்.
இரங்கத்தகும் நிலை எளிவருதல். தன்னைத் தந்தும் தன் குழந்தையின் எளிமையை நீக்குபவள் தாய் ஆதலின் 'தாய் போன்றான்' என்றார். உலகு என்பது உயர்ந்தோரைக் குறித்தது என்று கொண்டு அத்தகைய முனிவர்களுக்குத் தனது உண்மை வடிவம் மறையாது நன்கு தெரியும்படி 'ஒளிவரப் பிறந்தது' போன்றான் எனலும் ஒன்று. மகளிர் பரவசம் அடைந்தனர் இராமனைக் கண்டு என்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- To all the humble and needy he was like the mother who bore them come before them;
- to all whose hearts held love he became the rare ambrosia of the gods;
- to the world he was like light being born; to bright-eyed women
- he was like the clear wine pressed from honey, giving an intoxication past sobering.
What the poem says
The list continues. To the poor and helpless, Irāmaṉ is like a mother, who gives herself to relieve her child's need; to the loving he is nectar; to the world he is the dawn of light, which may also mean that to sages he showed his true divine form; and the women of the city, gazing at him, are as intoxicated as if they had drunk honey-wine.