கம்பராமாயணம் 10351 · யுத்த 37.338
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அவன் அலால் - அந்த இராமனையல்லாமல்; அங்கு ஆவி மற்று இன்மையால் - அயோத்தியில் உயிர் வேறு இல்லாமையால்; அனையன் நீங்க - அந்த இராமபிரான் அயோத்தியைப் பிரிந்து காடு செல்ல; காவி அம் கழனி நாடும் நகரமும் கவன்று வாழும் மா இயல் ஒண்கணாரும் மைந்தரும் - குவளை மலர்கள் நிறைந்த வயல்கள் சூழ்ந்த கோசல நாடும் அயோத்தி நகரமும் கவலையால் வாடி வாழ்கின்ற மாவடு ஒத்த கண் உடைய மகளிரும் ஆடவரும்; வள்ளல் எய்த - இராமபிரான் மீண்டு வர; ஓவியம் உயிர் பெற்றென்ன - சித்திரம் உயிர் பெற்று எழுந்தாற்போல; உணர்வு பெற்றார் ஓங்கினர் - அறிவு வரப் பெற்றவர்களாய் இழந்த நலத்தைப் பெற்று உயர்ந்தனர்.
இராமன் அயோத்தியர் உயிர் என்பதை முன்னும் (கம்ப. 1380, 1352) கூறியுள்ளார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Since there was no other life there but him, when he left,
- the land of lovely fields with blue lilies, the city, and the women
- with large bright eyes and the men who lived on in grief — when the generous one arrived,
- they rose like a painting come to life, and their senses returned.
What the poem says
Irāmaṉ was the very life of Kōcalam and Ayōttī. When he left, land, city and people lived on as though lifeless, in sorrow. Now that he is back, they come to life again, like figures in a painting suddenly breathing.