கம்பராமாயணம் 10352 · யுத்த 37.339

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1சுண்ணமும், சாந்தும், நெய்யும், சுரிவளை முத்தும், பூவும்,
எண்ணெயும், கலினமா விலாழியும், எண் இல் யானை
வண்ணவார் மத முந்நீரும் மான்மதம் தழுவும் மாதர்
கண்ண ஆம் புனலும், ஓடிக் கடலையும் கடந்த அன்றே.

பொருள் · Meaning in Tamil

சுண்ணமும் - வாசப் பொடியும்; சாந்தும் - சந்தனமும்; நெய்யும் - வாச நெய்யும்; சுரிவளை முத்தும் - வளைந்த சங்கீன்ற முத்தும்; பூவும் - எண்ணெயும் - கலின மா விலாழியும் - சேணம் பூட்டப் பெற்ற குதிரைகளின் நுரையும்; எண் இல் யானை வண்ண வார் மதமும் - கணக்கற்ற யானைகளின் நிறமமைந்த ஒழுக்காகிய மதநீரும்; நீரும் - மான்மதம் தழுவும் மாதர் கண்ண ஆம் புனலும் - கஸ்தூரி பூசிக்குளிக்கும் மகளிரது உடலில் வழிந்தோடும் நீரும்; ஓடிக் கடலையும் கடந்த - பெருக்கெடுத்துச் சென்று கடலையும் தாண்டிவிட்டன;

அன்று, ஏ - அசை அயோத்தி நகர மக்களின் மகிழ்ச்சிப் பெருக்கைப் புலப்படுத்தினர்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Scented powder, sandal paste, ghee, pearls from the spiral conch, flowers,
  2. oil, the foam of bridled horses, the long coloured streams
  3. of rut from countless elephants, water, and the water
  4. from the bodies of women anointed with musk — they ran and overflowed even the sea.

What the poem says

The city's celebration is pictured as a flood. Scented powder, sandal, perfumed ghee, pearls, flowers and oil are scattered; the foam of horses, the ichor of elephants and the musk-scented water of the bathing women pour through the streets, until the stream overflows even the ocean. It is a hyperbole for the overflowing joy of Ayōttī.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1cuṇṇamum, cāntum, neyyum, curi vaḷai muttum, pūvum,
eṇṇeyum, kaliṉa mā vilāḻiyum, eṇ il yāṉai
vaṇṇa vār matamum nīrum māṉmatam taḻuvum mātar
kaṇṇa ām puṉalum, ōṭik kaṭalaiyum kaṭanta aṉṟē.