கம்பராமாயணம் 10353 · யுத்த 37.340
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அனைவரும் அனையர் ஆகி அடைந்துழி - எல்லோரும் அத்தன்மை உடையவர்களாய் மகிழ்ச்சிப் பெருக்கோடு விமானம் நெருங்கிய அளவில்; அருளின் வேலை தனை இனிது அளித்த தாயர் மூவரும் - அருள்கடலாகிய இராமனைப் பெற்ற தாய்மார்கள் மூவரும்; தம்பிமாரும் - பரத சத்துருக்கனன் ஆதியரும்; புனையும் நூல் முனிவன் தானும் - முப்புரிநூல் அணிந்த முனிசிரேஷ்டனான வசிட்டனும்; பொன் அணி விமானத்து ஏற - பொன்னால் அழகு பெற்ற விமானத்தின்கண் ஏற வர; வனைகழல் குரிசில் - கட்டிய வீரக்கழலை உடைய இராகவன்; முந்தி - முற்பட்டுச் சென்று; மாதவன் தாளில் வீழ்ந்தான் - வசிட்ட முனிவனது திருவடிகளில் விழுந்து வணங்கினான்.
அயோத்தி மதிலுக்குப் புறம்பே கீழிறங்கிய விமானத்தில் அனைவரும் அயோத்தி செல்ல ஏறினர் என உணர்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- When all of them, in that state of joy, had drawn near, the three mothers
- who gave birth to that ocean of grace, the younger brothers,
- and the sage who wears the sacred thread climbed into the gold-adorned car;
- the prince of the fastened anklets went forward first and fell at the great ascetic's feet.
What the poem says
The Puṣpaka has landed outside the walls of Ayōttī, and the queen mothers, the brothers and the family priest Vacittaṉ (Vasiṣṭha) climb aboard to travel into the city. Irāmaṉ steps forward first of all to fall at the feet of his guru.