கம்பராமாயணம் 10368 · யுத்த 37.355

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அசனியின் குழுவும் ஆழி ஏழும் ஒத்து ஆர்த்தது என்ன,
விசியுறு முரசும், வேதத்து ஓதையும், விளிகொள் சங்கும்,
இசையுறு குழலும், ஏத்தின் அரவமும், எழுந்து பொங்கி,
திசை உறச் சென்று, வானோர் அந்தரத்து ஒலியின் தீர்ந்த.

பொருள் · Meaning in Tamil

விசையுறு முரசும் - வேகமாக அடிக்கப் பெறும் முரசு ஓசையும்; வேதத்து ஓதையும் - வேத ஓசையும்; விளிகொள் சங்கும் - சங்க நாதமும்; இசை உறுகுரலும் - இராகம் கூடிய வாய்ப் பாட்டொலியும்; ஏத்தின் அரவமும் - தோத்திர முழக்கொலியும்; எழுந்து பொங்கி - மேலே புறப்பட்டுச் சென்று; திசை உறச் சென்று - நாலா பக்கமும் அளாவி; வானோர் அந்தரத்து ஒலியின் - தேவர்கள் மகிழ்ச்சிப் பெருக்கால் மேலே செய்யும் ஆரவாரத்தின் கண்; தீர்ந்த - ஒலியடங்கிப் போயின;

தேவர்கள் மகிழ்ச்சி ஆரவாரத்தின் மிகுதி உணர்த்தியது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As though a host of thunderbolts and all seven seas were roaring together,
  2. the fast-beaten drums, the sound of the Vedas, the calling conches,
  3. the tuneful flutes and the din of praises rose and surged,
  4. spread to every quarter, and were lost in the shouting of the gods in the sky.

What the poem says

The earthly music of welcome, drums, Vedic chanting, conches, flutes and hymns of praise, swells like thunder and the seven seas together. Yet even this is drowned out by the greater roar of joy from the gods overhead. This verse closes the Return episode.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1acaṉiyiṉ kuḻuvum āḻi ēḻum ottu ārttateṉṉa,
vicaiyuṟu muracum, vētattu ōtaiyum, viḷi koḷ caṅkum,
icaiyuṟu kuḻalum, ēttiṉ aravamum, eḻuntu poṅki,
ticai uṟac ceṉṟu, vāṉōr antarattu oliyiṉ tīrnta.