கம்பராமாயணம் 10367 · யுத்த 37.354
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வான் உளோர்கள் - தேவர்கள்; விரை செறி அலங்கல் மாலைப் புட்பகவிமானம் உரைசெயின் - மணமிக்க மலர் மாலை அணிந்த இந்த புட்பக விமானம் பற்றிச் சொல்லப் புக்கால்; உலகம் உண்டான் மணி அணி உதரம் ஒவ்வா - உலகம் உண்டவனாகிய திருமாலின் அழகு பொருந்திய திருவயிறும் உவமையாகாது; கரைசெயல் அரிய வேதக் குறுமுனி கையும் ஒவ்வா - கரை காண முடியாத வேதங்களை உணர்ந்த அகத்திய முனிவனது (கடலை அடக்கிய) கையும் உவமையாகாது; என்று என்று - என்று கூறி; ஒண் மலர் தூவி ஆர்த்தார் - ஒள்ளிய மலர்களைத் தூவி ஆரவாரம் செய்தனர்
உலகை அடக்கிய வயிறும், கடலை அடக்கிய கையும் புட்பகத்துக்கு ஒவ்வா என்றதாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “If one is to speak of it, the jewelled belly of him who swallowed the world is no match,
- nor is the hand of the short sage of the Vedas, whose shores none can reach,
- for the Puṣpaka car with its fragrant garlands of flowers!” So, again and again,
- the dwellers of heaven spoke, and showered bright flowers and cheered.
What the poem says
The gods marvel at the Puṣpaka's capacity. Not even Viṣṇu's belly, which once held all the worlds, nor the palm of the sage Akattiyaṉ (Agastya), who drank up the whole ocean, can compare with this car that holds an entire army.