கம்பராமாயணம் 10366 · யுத்த 37.353
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘ஏறுக சேனை எல்லாம் விமான மீது ‘என்று தன்போல்
மாறு இலா வீரன் கூற, வந்துள அனிக வெள்ளம்
ஊறு இரும் பரவை வானத்து எழிலியுள் ஒடுங்குமாபோல்
ஏறி, மற்று இனைய வீரன் இணையடி தொழுதது அன்றே.
பொருள் · Meaning in Tamil
தன் போல் மாறு இலா வீரன் - தனக்கு ஒப்பாக மற்று ஒன்று இல்லாத பெருவீரனாகிய இராமபிரான்; சேனை எல்லாம் விமானம் மீது ஏறுக என்று கூற - எல்லாச் சேனைகளும் விமானத்தின் மேல் ஏறட்டும் என்று கட்டளையிட; வந்துள அனிக வெள்ளம் - வந்த சேனைப் பெருக்கு; ஊறு இரும் பரவை வானத்து எழிலியுள் ஒடுங்குமா போல் - மேலும் மேலும் ஊறுகின்ற கடல் விண்ணில் உள்ள மேகத்துள் ஒடுங்குவதைப் போல; ஏறி - விமானத்தில் ஏறி; இளைய வீரன் இணை அடி தொழுதது - இலக்குவனது திருவடிகளை வணங்கியது.
அன்று, ஓ - அசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “Let all the army climb onto the car,” said
- the hero who has no equal but himself; and the flood of troops that had come,
- like the vast welling ocean drawn up into a cloud in the sky,
- climbed aboard and bowed at the two feet of the younger hero.
What the poem says
Irāmaṉ orders all the troops who have come out from Ayōttī to board the Puṣpaka. The whole army fits inside it, as the ocean is taken up into a rain cloud, and the soldiers salute Ilakkuvaṉ.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘ēṟuka cēṉai ellām vimāṉamītu ‘eṉṟu taṉpōl
māṟu ilā vīraṉ kūṟa, vantuḷa aṉika veḷḷam
ūṟu irum paravai vāṉattu eḻiliyuḷ oṭuṅkumāpōl
ēṟi, maṟṟu iḷaiya vīraṉ iṇai aṭi toḻutatu aṉṟē.