கம்பராமாயணம் 10365 · யுத்த 37.352
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
சுமந்திரன் -; அழுகையும் உவகை தானும் தனித்தனி அமர் செய்து ஏற - அழுகையும் மகிழ்ச்சியும் தனித்தனியாக ஒன்றோடொன்று போட்டியிட்டு மேலே மிக; எழுந்து விம்மி தொழுதனன் நிற்றலோடும் - நின்று துடித்து வணங்கி நின்ற அளவில்; இராமன் தழுவினன் - இராமன் தழுவினன்; மற்றைத் தம்பியும் அனைய நீரான் - இலக்குவனும் அதுபோலவே தழுவினன் (பின்னர் சுமந்திரன்); இந்த மாநிலக் கிழத்திக்கு - இந்த நிலமகளுக்கு; இனி வழு உளது அன்று என்றான் - இனித்துன்பம் இல்லை என்று மகிழ்ச்சி கூறினான்.
இறுதியாக வனத்தில் இராமனைவிட்டு வந்தவனாதலின் மீண்டும் காணப் பெற்றபோது அழுகை உவகையும் போட்டியிடுவனவாக ஆனான் சுமந்திரன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With weeping and joy each warring to rise above the other,
- Cumantiraṉ bowed, rose sobbing, and as he stood there
- Irāmaṉ embraced him; the other brother did the same;
- and he said, “No harm is left now for this lady of the great earth.”
What the poem says
Cumantiraṉ was the last to leave Irāmaṉ at the edge of the forest, so on seeing him again tears and joy compete in him. Irāmaṉ and Ilakkuvaṉ embrace him, and he declares that the Earth, as a woman whose lord has returned, will suffer no more.