கம்பராமாயணம் 1045 · பால 17.10

Section பால காண்டம் / 17. உண்டாட்டுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வாள் நுதல் ஒருத்தி - ஒளி நிறைந்த நெற்றியுடையாள் ஒருத்தி; தடன் ஒக்கும் நிழலை - (தன்னைப் போன்றே) அழகின் பெருமையில் ஒத்திருக்கும் தனது நிழலை; பொன்செய் தண்நறும் தேறல் வள்ளத்துக் காணா - பொன்னால் செய்யப்பட்ட குளிர்ந்த மணமுள்ள மதுவின் கிண்ணத்தில் கண்டு; தோழி, உடன் ஒக்க உவந்து நீயும் உண்ணுதி என்றாள் - “தோழியே! நீயும் என்னோடு இணைந்து மகிழ்ந்து (இம்மதுவினை) உண்ணுவாய்!” என்று வேண்டினாள்; விடன் ஒக்கும் நெடியநோக்கின் - (விரும்பாதார்க்கு) நஞ்சனைய நீண்டவிழிகளையும்; அமிழ்து ஒக்கும் இன்சொலார்தம் - (உண்பாரை நீண்டு வாழ்விக்கும்) அமிழ்தம் போல, கேட்டார் செவிக்கு நெடுநாள் இனிக்கும் இன் மொழியும் உடைய மகளிருடைய; மடன் ஒக்கும் மடனும் உண்டே? - அறியாமை போன்ற அறியாமை வேறு எவரிடத்தும் உண்டோ? (இல்லை என்க)

அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்னும் மகளிர் நாற்குணங்களுள் ஒன்றான இம் மடம் பெண் இயல்புக்கு மேலும் அழகு சேர்ப்பதனை இப்பாடலாலும் காண்க.

வேற்றுப் பொருள் வைப்பணி. காணா - கண்டு; செய்யா என்னும் எச்சம். “இருநோக்கு இவள் உண்கண் உள்ளது; ஒரு நோக்கு நோய் நோக்கு” (திருக். 1091) என்பராதலின், “விடன் ஒக்கும் நோக்கு” என்றார். கேட்பார்க்குப் பேரின்பம் தருதலின், “அமிழ்தொக்கும் இன்சொல்” என்றார். “அமிழ்து படுதீஞ்சொல்” (பெருங். 1:43:35).

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Is there any innocence like the innocence of women whose long eyes are like poison
  2. and whose sweet words are like nectar? A woman with a bright brow, seeing
  3. in her golden cup of cool, fragrant wine a reflection as lovely as herself,
  4. said, 'Drink it gladly, my friend, along with me!'

What the poem says

A new metre begins here, and with it a series of comic scenes showing the women's tipsy confusions. One woman sees her own reflection in her golden wine cup. Thinking it is a lovely friend, she invites her to drink along with her.

The poet calls this the innocence of women whose eyes wound like poison and whose words are as sweet as nectar. Innocence was counted one of the four traditional graces of womanhood, and here it makes her more charming.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1viṭaṉ okkum neṭiya nōkkiṉ amiḻtu okkum iṉcolārtam
maṭaṉ okkum maṭaṉum uṇṭē! vāḷ nutal orutti, kāṇā
taṭaṉ okkum niḻalaip poṉ cey taṇ naṟun tēṟal vaḷḷattu
'uṭaṉ okka uvantu nīyē uṇṇuti tōḻi!' eṉṟāḷ.