கம்பராமாயணம் 1046 · பால 17.11
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அச்ச நுண் மருங்குலாள் - (இது முறிந்து விடக்கூடும் எனக் கண்டார்) அஞ்சுமாறு நுண்ணிய இடையினையுடையவளாய்த் தெய்வப் பெண் போன்றிருக்கும் ஒருத்தி; அளகபந்தி, நச்சுவேல் கருங்கண் செவ்வாய் நகைமுகம் - (தன்) கூந்தல் தொகுதியும் நஞ்சு பூசிய வேல் போன்ற கருங்கண்களும், சிவந்தவாயும், நகையோடு கூடிய முகமும்; மதுவுள் தோன்ற - பருகும் வள்ளத்து மதுவில் பிரதி பிம்பமாய்த் தோன்ற; பிச்சிநீ என்செய்தாய் - பித்துப் பிடித்தவளே! நீ என்ன செய்கிறாய்; இப்பெரு நறவு இருக்க - இதோ இச்சாடியில் பெரிய அளவில் மது நிறைந்திருக்க; வாளா எச்சிலை நுகர்தியோ - வீணே வள்ளத்தில் நான் உண்ட எச்சில் மதுவையா நுகர்கின்றாய்; என்று எயிற்று அரும்பு இலங்க நக்காள் - என்று (இவள் நிழலை வேறொரு பெண்ணாகக் கருதி) பற்களாகிய முல்லை அரும்பு வெளித்தோன்றி ஒளிரச் சிரித்தாள்.
மது வுண்பார் நிழலையும் உருவையும் பிரித்தறிய இயலாதவர் ஆவார் என்றபடி. மிகுந்த கள்ளிருக்கவும், உண்டு எஞ்சிய எச்சிலையா உண்பது? என்று கேட்டு, இது பித்தாவார் குணம் ஆதலின் “பிச்சிநீ” என்றாள். அவளைப் பிச்சி என்னும் இவளும் நிழலை உண்மை உருவென்று நினைந்து பேசும் பிச்சி என்பது அறியாள். மதுவுண்பார் தன்பிழையுணராது பேசும் தகவை அழகுற இயம்பியுள்ள அருமையை உணர்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- A woman like a goddess, with a waist so slender it made one afraid, saw her curls,
- her dark eyes like poisoned spears, her red mouth and cool face appear in the wine;
- 'You crazy girl, what have you done? With this great store of toddy here, do you
- idly drink my leavings?' she said, and laughed, her bud-like teeth gleaming.
What the poem says
Another drinker sees her face reflected in her cup and takes it for another woman drinking from it. She laughs and scolds her for a madwoman. Why drink someone's leftovers when a whole jar of toddy stands right there?
The joke is that she is the madwoman, talking to her own reflection. Drunkards, the poet observes, cannot tell a shadow from the real thing, and never see their own mistakes.