கம்பராமாயணம் 1047 · பால 17.12

Section பால காண்டம் / 17. உண்டாட்டுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வேறு ஓர் மறம் உலாம் கொலை வேல் கண்ணாள் - கொடுமை திகழும் கொலைத் தொழிலைச் செய்யும் வேல் போன்ற கண்ணினையுடைய வேறு ஒரு மங்கை; மணியின் வள்ளத்து வெள்ளை நிலாக் கற்றை பாய - (தான் ஏந்திய) மணிகள் பதித்த (பளிங்கு மதுக்) கிண்ணத்தில் வெள்ளை நிற நிலாக்கதிர்கள் பாய்ந்ததனால்; நிறைந்தது போன்று தோன்ற - (அந்தப் பளிங்குக் கிண்ணம் மது) நிறைந்திருப்பது போலத் தோன்றியதனால்; நறவு என அதனை வாயின் வைத்தனள் - மதுவென்று கருதி, அக் கிண்ணத்தை வாயில் வைத்தாள்; புறம் எலாம் நகைசெய்து ஏச நாண் உட்கொண்டாள் - பக்கத்தில் உள்ளவர்கள் எல்லோரும் (வெறுங் கிண்ணத்தை இவள் வாய் வைத்து உறிஞ்சுவது கண்டு) நகைத்து இகழ, தானும் தன்னுள்ளே நாணம் (மிகக்) கொண்டாள்.

மது உண்ணா முன்னமே, அதன் நினைவுகூட மயக்கம் செய்விக்க வல்லது என்றவாறு. புறம் எல்லாம் நகை செய்யவும், தானும் வெட்கமுறவும் செய்ய வல்லது மது விருப்பம் என்று நிகழ்ச்சியொன்றின் வாயிலாய் உணர்த்தினார். கொலைவேற் கருவியிருந்தும் நாணம் தவிர்க்க இயலாதாயிற்று. நறவு உட் செல்லுமுன் நாணம் உட்சென்றது என்றுரைத்த நயம் காண்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. While everyone around laughed and jeered, another woman of matchless form,
  2. with eyes like a cruel, killing spear, saw her jewelled cup, as the white
  3. moonbeams poured into it, look as if it were full,
  4. and put it to her lips as toddy, and drank down shame.

What the poem says

A woman holds up an empty crystal cup. The moonlight pours into it and makes it look full of milky-white toddy. She raises it to her lips and sucks at nothing, and everyone around her bursts out laughing.

Even before she has drunk anything, the mere longing for drink has fooled her. The poet's twist is in the last words: what she swallowed was not toddy but shame. Her eyes may be deadly as spears, yet they could not save her from embarrassment.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1puṟam elām nakaiceytu ēcap, poru aru mēṉi vēṟu ōr
maṟam ulām kolai vēl kaṇṇāḷ, maṇiyiṉ vaḷḷattu veḷḷai
niṟa nilāk kaṟṟai pāya, niṟaintatu pōṉṟu tōṉṟa,
naṟavu eṉa ataṉai vāyiṉ vaittaṉaḷ, nāṇ uṭkoṇṭāḷ.