கம்பராமாயணம் 1048 · பால 17.13

Section பால காண்டம் / 17. உண்டாட்டுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

யாழ்க்கும் இன்குழற்கும் இன்பம் அளித்தன இவை ஆம் என்ன - வீணையின் இசைக்கும், இனிய குழலிசைக்கும் (இசை) இன்பம் கொடுத்தவை இவள் சொற்கள்தாம் என்னுமாறு; கேட்கும் மென் மழலைச் சொல் ஓர் கிஞ்சுகம் கிடந்தவாயாள் - (இனிதான ஒலி) கேட்கச் செய்கிற மெல்லிய மழலை மொழியினையும், முருக்க மலர் அனைய சிவந்த வாயினையும் உடையாள் ஒருத்தி; தாள் கருங்குவளை தோய்ந்த தண் நறைச் சாடியுள் - தண்டினையுடைய கருங்குவளை மலர் இடப் பட்டுள்ள குளிர்ந்த கள்ளினையுடைய சாடியின் உள்ளே; தன் வாள்கண்ணின் நிழலைக் கண்டாள் - தன்னுடைய வாள்போன்ற கண்களின் நிழலைப் பார்த்தாள் (நிழலென அறியாது); வண்டென ஓச்சுகின்றாள் - (உள்ளே உள்ள குவளை மலர்களில் மது வுண்ண வந்த வண்டுகள் என்று) தன்கண்நிழலை ஓட்டலானாள்! எல்லா இனிமைப் பொருட்கும் இனிமைகொடுக்க வல்லவை குழலும் யாழும். அவற்றுக்கும் இனிமை கொடுக்க வல்லவை இவள் மழலைச் சொற்கள் என்க.

கட் சாடியுள் மணத்திற்காகக் குவளை, தாமரை முதலிய மலர்களை இட்டு வைத்தல் மரபு. அந்த மலர்களை மொய்க்க வண்டுகள் வந்து விட்டன என்று கருதிச் சாடியுள் தெரிந்த தன் விழி நிழலை ஓட்டுகின்றாள்! மதுப்பழக்கம் நகைப்பிற்கு இடம் ஆனவற்றையே செய்யும் என மேலும் உணர்த்தியவாறு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'It is these that lend sweetness to the yāḻ and the sweet flute,' one would say
  2. of the soft, lisping words one heard from a woman whose mouth was red as the kiñcukam flower;
  3. in the jar of cool toddy steeped with long-stalked dark lilies she saw
  4. the reflection of her own sword-bright eyes, and tried to shoo it away as bees.

What the poem says

Another tipsy woman, whose lisping voice is sweeter than the lute and flute that sweeten everything else. Dark lilies were dropped into toddy jars to scent the drink.

Looking into her jar, she sees her own dark eyes reflected among the lilies and takes them for bees come to feed on the flowers. She waves her hand to drive them off. The poet keeps showing how drink makes people do laughable things.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'yāḻkkum iṉ kuḻaṟkum iṉpam aḷittaṉa ivai ām' eṉṉak
kēṭkum meṉ maḻalaic col ōr kiñcukam kiṭanta vāyāḷ,
tāḷ karuṅ kuvaḷai tōynta taṇ naṟaic cāṭiyuḷ taṉ
vāḷ kaṇiṉ niḻalaik kaṇṭāḷ, 'vaṇṭu' eṉa ōccukiṉṟāḷ.