கம்பராமாயணம் 1049 · பால 17.14

Section பால காண்டம் / 17. உண்டாட்டுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஆங்கு, ஓர் கனங்குழை - அங்கே, பொன்னாலியன்ற குழையணிந்தாள் ஒருத்தி; கள்ளின் உள்ளால்வெளிப்படுகின்ற காட்சி வெண் மதி நிழலை - மதுவின் உள்ளே பிரதிபலித்துத் தோன்றுகின்ற அழகிய வெள்ளைத் திங்களினது பிம்பத்தை; களித்த கண் மதர்ப்ப நோக்கி - கள்ளுண்டதனால் வந்த களிப்பு, தன் கண்களில் தோன்றுமாறு பார்த்து; நீ வானத்து அரவினை அஞ்சி வந்து ஒளித்தனை - மதியே, நீ வானத்தில் உன்னைத் தீண்ட வரும் பாம்புகளுக்கு அஞ்சி இங்கு வந்து ஒளிந்திருக்கின்றாய்; அளித்தனென் அபயம் அஞ்சல் - (ஆகையால், நான் உனக்கு) அபயம் அளித்தேன்; அஞ்சற்க; என்று ஆங்கு இனியன உணர்த்துகின்றாள் - என்பன போன்ற இனிய மொழிகளைக் கூறுபவள் ஆனாள்.

சந்திர பிம்பத்தை வெண்மதி எனப் பிழையாகக் கருதி, அதற்கு அபயமும் கொடுக்கின்றாள் என்பதனால், மது வெறி, பிழையின் மேல் பிழைபுரிவிக்க வல்லது என உணர்த்தியவாறு. குடிவெறியினும் அபயம் நல்கும் குணமுடையார் கோசல நாட்டார் என்பதும் குறித்தவாறு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Her drunken eyes glittering, a woman there with heavy earrings
  2. gazed at the reflection of the white moon showing in the toddy
  3. and said, 'I grant you refuge; you came here and hid for fear of the snake in the sky.
  4. Do not be afraid!', and went on speaking such kind words to it.

What the poem says

A woman sees the moon reflected in her toddy and decides the moon itself has come down to hide in her cup. In Indian myth the snake Rāku swallows the moon at an eclipse, so she supposes it has run away from the snake. Very kindly, she promises it her protection.

One mistake leads to another. She takes the reflection for the moon, then invents a reason for it to be there. Even drunk, the poet adds, the people of Kōcalam are quick to offer refuge to anyone in fear.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kaḷitta kaṇ matarppa, āṅku ōr kaṉaṅ kuḻai, kaḷḷiṉ uḷḷāl
veḷippaṭukiṉṟa kāṭci veṇ mati niḻalai nōkki,
'aḷittaṉeṉ apayam; vāṉattu araviṉai añci nī vantu
oḷittaṉai, añcal!' eṉṟu āṅku iṉiyaṉa uṇarttukiṉṟāḷ.