கம்பராமாயணம் 1051 · பால 17.16

Section பால காண்டம் / 17. உண்டாட்டுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மின் எனநுடங்குகின்ற மருங்குலாள் ஒருத்தி - மின்னல் என நெளிகின்ற இடையினையுடையாள் ஒருத்தி; வெள்ளை இன் அமுது என்ன செஞ்சொல் இடைதடுமாறி - வெண்ணிற இனிய அமிழ்தம் போன்ற செவ்விய பேச்சு (மதுவின் மயக்கால்) இடையில் குழறுண்டு; அல்குல் வன்ன மேகலையை நீக்கி மலர்த்தொடை சூழ்ந்தாள் - (தனது) இடைப் பகுதியில் அணிந்திருந்த அழகிய மேகலையைக் கழற்றிவிட்டு, அங்கே மலர் மாலையைச் சுற்றிக் கொண்டாள்; பொன்அரி மாலை கொண்டு புரிகுழல் புனையல் உற்றாள் - அதுமட்டும் அன்றி, கழுத்தணியாகிய பொன்அரி மாலையை எடுத்துச் சுருண்ட கூந்தலில் அணியத் தொடங்கினாள்! பொன்னரி மாலை கழுத்தணியாவதை, “சுடர் மணித் தோளில் தோன்றும் பொன் அரி மாலை” (கம்ப. 7636) என்று பின்னும் குறிப்பர்.

மது மயக்கு, இடையில் அணிவதைத் தலை அணியாக்கும், தலையில் அணிவதை இடையணியாக்கும் என எள்ளுகின்றார்.

“இருதனத்து இரவிக்கை தனை அரையில் உடை தொடுவார்; இந்த உடை ரவிக்கையெனச் சந்த முலைக்கு இடுவார்” (குற். குற. 22) என்பதும் இதனையொட்டி எழுந்தது எனலாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. A woman whose waist swayed like lightning, her sweet speech,
  2. like white nectar, stumbling and slurring as it were,
  3. took off her coloured girdle and wound a flower garland round her hips,
  4. and set about dressing her curling hair with a necklace of gold.

What the poem says

Drink muddles everything. A slender woman, her usually sweet words slurring, takes off the jewelled girdle from her hips and ties a flower garland there instead. Then she starts winding her gold necklace into her hair.

What belongs at the waist goes on the head, and what belongs on the head goes to the waist. A much later Tamil poem jokes in the same way about women who mix up their blouses and their skirts.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1miṉ eṉa nuṭaṅkukiṉṟa maruṅkulāḷ orutti, veḷḷai
iṉ amiḻtu aṉaiya tīm col iṭai taṭumāṟi eṉṉa
vaṉṉa mēkalaiyai nīkki malart toṭai alkul cūḻntāḷ,
poṉṉarimālai koṇṭu puri kuḻal puṉaiyaluṟṟāḷ.