கம்பராமாயணம் 1055 · பால 17.19
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
புள்உறை கமல வாவிப் பொருகயல் வெருவி ஓட - (நீர்ப் பறவைகள் வாழ்கின்ற) தாமரைத் தடாகங்களில் ஒன்றை யொன்று மோதுகின்ற கயல் மீன்கள், (இவற்றிற்கு) ஒப்பாக இயலாதென்று அஞ்சி ஓடுமாறு; வள் உறை கழித்த வாள்போல் வசி உற வயங்கு கண்ணாள் - தோல் உறையிலிருந்து உருவியெடுத்த வாள்போன்ற கூர்மை மிக மிளிர்கின்ற கண்களையுடையவளும்; கள்உறை மலர் மென் கூந்தல் களி இள மஞ்ஞை அன்னாள் - தேன்தங்கும் மலர்களை யணிந்த மெல்லிய கூந்தலையுடைய களித்த இளமயிலை ஒப்பவளும் ஆகிய ஒருத்தி; உள் உறை அன்பன் உண்ணான் என உன்னி நறவை உண்ணாள் - (தன்) உள்ளத்துள் (எப்போதும்) உறைகின்ற (தன்) காதலன் (மது) உண்ணான் என்ற காரணத்தால் (தானும்) மதுவை உண்ணாதவள் ஆயினாள்.
உண்மைக் காதல் புலன் இன்பத்தைத் துறக்கவும் ஒருப்படும் என்பது உணர்த்தியவாறு. அவன் வெளியே உறைந்து மறைபவன் அல்லன் என்பாள், “உள் உறை அன்பன்” என்றாள். “நெஞ்சத்தார் காதலராக வெய்துண்டல் அஞ்சுதும் வேபாக்கு அறிந்து” (திருக். 1128) என்பாள் வள்ளுவக் காதலியும். கணவன் ஒழுக்கத்திற்கு ஊறு செய்யாத வாழ்க்கைத்துணை இவள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Making the fighting kayal fish in lotus pools where water-birds dwell flee in fear,
- her eyes shone keen as a sword drawn from its leather sheath;
- like a joyful young peacock, her soft tresses decked with honey-filled flowers,
- she would not drink the toddy, thinking, 'The beloved who dwells in my heart does not drink.'
What the poem says
One woman stands apart from the drinking. Her eyes are so bright and sharp that even the darting kayal fish, the usual comparison for eyes, run away in shame.
She will not touch the toddy, because her beloved lives inside her heart and he does not drink. True love, the poet suggests, can give up a pleasure for the sake of the one loved. A woman in the Tirukkuṟaḷ refuses hot food for fear of scalding the lover who lives in her heart.