கம்பராமாயணம் 1056 · பால 17.20

Section பால காண்டம் / 17. உண்டாட்டுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கூற்று உறழ் நயனங்கள் சிவப்பக், கூன் நுதல்
ஏற்றி, வாள் எயிறுகள் அதுக்கி, இன் தளிர்
மாற்று அரும் கரம் தலம் மறிக்கும் மாது ஒரு
சீற்றம் ஆம் அபிநயம் தெரிக்கின்றார் இனே.

பொருள் · Meaning in Tamil

ஒருமாது, சீற்றம்ஆம் அபிநயம் தெரிக்கின்றாரின் - ஒருபெண், வெகுளியுற்றோர் அபிநயம் (இது என்று தெரிந்து கொள்ளுங்கள் எனக்) காட்டுவாள் போன்று; கூற்று உறழ் நயனங்கள் சிவப்ப - (விரும்பாதார்க்கு) இயமனைப் போன்று துன்பம் செய்யும் இருவிழிகளும் (மது வேகத்தால்) சிவந்து போகவும்; கூன் நுதல் ஏற்றி - வளைவுகள் நெற்றியில் தோன்றுமாறு புருவங்களை (நெரித்து) மேல் ஏற்றி; வாள் எயிறுகள் அதுக்கி - ஒளியுடைய பற்களைக் கடித்து; இன்தளிர்மாற்று அருங் கரதலம் மறிக்கும் - கண்ணுக்கு இனிய தளிரின் அழகைத் (தமக்கு முன்னே தலையெடுக்க இயலாதவாறு) போக்குகின்ற (அழகுடைய) கைத்தலங்களை மடக்குவாள்.

மதுவுண்டால் நிகழும் மெய்ப்பாடுகளோடு வெகுண்டோர் மெய்ப்பாடுகள் ஒக்கும் என்பதால், அது வெறுக்கத்தக்கதென்று உணர்த்தியவாறு.

வெகுண்டோன் அவிநயம், “மடித்த வாயும் மலர்ந்த மார்பும், துடித்த புருவமும், சுட்டிய விரலும், கன்றிய உள்ளமொடு கை புடைத்திருத்தலும்” (சிலம். மேற். அடியார் 3./2.) ஆம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Her eyes, deadly as Death, turning red, her curved brows
  2. raised high, her bright teeth clenched, her hands, whose tender beauty
  3. no fresh young shoot can match, twisting about, one woman
  4. looked like a dancer demonstrating the gesture of rage.

What the poem says

Now the drink turns some women angry. One woman's eyes go red, she knits and raises her brows, grinds her teeth and twists her hands. She looks as if she were a dancer showing an audience the classical gesture for fury, which treatises on drama describe in just these terms.

Because drunkenness produces the same marks as rage, the poet implies it is something to be shunned.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kūṟṟu uṟaḻ nayaṉaṅkaḷ civappa, kūṉ nutal
ēṟṟi, vāḷ eyiṟukaḷ atukki, iṉ taḷir
māṟṟu aruṅ karatalam maṟikkum mātu oru
cīṟṟam ām avinayam terikkiṉṟāriṉē.