கம்பராமாயணம் 1057 · பால 17.21

Section பால காண்டம் / 17. உண்டாட்டுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1துடித்த வான் துவர் இதழ்த் தொண்டைத் தூ நிலாக்
கடித்த வால் எயிறுகள் அதுக்கிக், கண்களாம்
வடித்த வெம் குருதி வேல் விழிக்கும் மாதர் மெய்
பொடித்த வேர் புறத்து உகு நறவம் போன்றது ஏ.

பொருள் · Meaning in Tamil

துடித்த வான் துவர் இதழ்த் தொண்டை - துடிக்கின்ற மிகச் சிவந்த வாய் இதழ்களாகிய கொவ்வைக் கனியை; தூநிலாக் கடித்த வாள் எயிறுகள் அதுக்கி - வெண்ணிற நிலாவினைத் துண்டு செய்து வைத்துள்ளது போன்ற ஒளிபொருந்திய பற்களாற் கடித்து; வடித்த வெங்குருதி வேல் கண்களால் விழிக்கும் - கூர்மை செய்யப்பட்டு (பகைவரின்) கொடுங்குருதி தோயப்பெற்ற வேல்களைப் போன்று, மதுவால் சிவந்து போன தன் கண்களால் பார்க்கின்ற; மாதர் மெய் உகும் பொடித்த வேர் - ஒருத்தியின் உடம்பில் சிந்தும் வியர்வை நீர்; புறத்து உகு நறவம் போன்றது - உடலுட் சென்ற மது வெளியே சிந்துவது போன்றிருந்தது. உள்ளே சென்ற மதுவே பெண்தன்மைக்கு மாறான இத்தகைய மெய்ப்பாடுகளைத் தோற்றுவித்தவாறு வெளியே சிந்தியது. குடித்தகள் உள்ளே நிரம்பி அங்கு இடமின்மையால், மயிர்க்கால் தோறும் வெளியே கசிவது போல, உடல் வெயர்த்தது என்பதாம். உள்ளே இடமில்லாது போனாலும், ஊற்றிக் கொண்டே இருப்பதால், நுண்துளை வழியாக உட்சென்றது வெளியே புறப்பட்டது எனினுமாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Biting her quivering, deep-red lips, red as the toṇṭai fruit,
  2. with gleaming teeth like slivers cut from the pure moon, and glaring with eyes
  3. like honed spears steeped in hot blood, a woman's body
  4. broke out in sweat, like toddy spilling out of her.

What the poem says

Another woman is in the grip of drink. She bites her trembling red lips with her moon-white teeth, and her eyes are as red as spears dipped in blood. None of this suits a woman's gentle nature.

Then she starts to sweat. The poet imagines that she has drunk so much the toddy has nowhere left to go, and is seeping out through every pore of her skin.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tuṭitta vāṉ tuvar itaḻt toṇṭait tū nilāk
kaṭitta vāḷ eyiṟukaḷ atukkik, kaṇkaḷāl
vaṭitta veṅ kuruti vēl viḻikkum mātar mey
poṭitta vēr puṟattu uku naṟavam pōṉṟavē.