கம்பராமாயணம் 1058 · பால 17.22

Section பால காண்டம் / 17. உண்டாட்டுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கனித் திரள் இதழ் பொழி செம்மை கண் புக,
நினைப்பது ஒன்று உரைப்பது ஒன்று ஆம் ஒர் நேர் இழை,
தனித் தட மரை மலர் முகத்துச் சாபமும்
குனித்தது, பனித்தது குழவித் திங்கள் ஏ.

பொருள் · Meaning in Tamil

கனித்திரள் இதழ் பொதி செம்மை கண்புக - கொவ்வைக் கனிபோன்று திரண்ட இதழ்களில் மிகுந்திருக்கின்ற செந்நிறம் கண்களில் போய்ச்சேர; நினைப்பது ஒன்று உரைப்பது ஒன்று ஆம் ஒர் நேரிழை - மனத்தால் நினைப்பது ஒன்றும், வாயால் சொல்வது ஒன்றுமாக ஆகிப்போன சிறந்த அணிகள் பூண்டாள் ஒருத்தியின்; தனிச் சுடர்த் தாமரை முகத்துச் சாபமும் - தனி ஒளி வீசும் (அவள்) தாமரை முகத்தில் உள்ள வில்போன்ற புருவங்களும், குனித்தது; குழவித்திங்கள் பனித்தது - வளைந்தன; நெற்றியென்னும் பிறைச் சந்திரனும் வியர்த்தது.

கோபத்தின் குணங்கள் யாவும் கள் உண்பார்க்கு உளவாதல் சுட்டியவாறு. “திங்களுள் தீத் தோன்றியற்று” (கலி 4/: 24) என்றாற் போல, “திங்களும் வியர்த்தது” என மதுவின் கொடுமை கூறியவாறு. மதுவுண்பார் உள்ளமும் உரையும் ஒன்றுபடாமல் நினைப்பது ஒன்றும் உரைப்பது ஒன்றும் ஆக ஆவார் என்பார், “நினைப்பது ஒன்று உரைப்பது ஒன்று ஆம் ஒர் நேரிழை” என்றார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the redness held in her full, fruit-like lips passed into her eyes,
  2. in a jewelled woman who now thought one thing and said another,
  3. the bow on her lotus face of peerless radiance
  4. bent, and the young crescent moon broke out in sweat.

What the poem says

The red leaves her lips and goes into her eyes, a sign of both drink and anger. The bows of her eyebrows bend into a frown, and the crescent moon of her forehead breaks out in sweat. It is as strange as fire coming out of the cool moon.

She now says one thing while she means another. Drinkers, the poet notes, lose the agreement between what they think and what they say.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kaṉit tiraḷ itaḻ poti cemmai kaṇ puka,
niṉaippatu oṉṟu uraippatu oṉṟu ām or nēriḻai,
taṉic cuṭart tāmarai mukattuc cāpamum
kuṉittatu, paṉittatu kuḻavit tiṅkaḷē.