கம்பராமாயணம் 1059 · பால 17.23

Section பால காண்டம் / 17. உண்டாட்டுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1இலவு இதழ்த் துவர் விட, எயிறு தேன் உக,
முலை மிசைக் கச்சொடு கலையும் மூட்டு அற,
அலை குழல் சோர்தர, அசதி ஆட்டலால்,
கலவி செய் கொழுநரும் கள்ளும் ஒத்தவே.

பொருள் · Meaning in Tamil

இலவு இதழ் துவர்விட - இலவம் பூவை ஒத்த (வாய்) இதழ்கள் (தமக்குரிய) செந்நிறம் நீங்கவும்; எயிறு தேன் உக - பற்களின் இடையே ஊறும்நீர் இனிக்குமாறு சுரக்கவும்; முலைமிசை கச்சொடு கலையும் மூட்டு அற - தனங்களின் மீது அணிந்த கச்சுடனே (இடையில் அணிந்த) ஆடையும் முடிச்சு அவிழவும்; அலைகுழல் சோர்தர - கூந்தல் அலைவதனால் சரிந்து வீழவும்; அசதி ஆடலால் - பரிகாசச் சிரிப்புத் தோன்றுவதனால்; கொழுநர் செய் கலவியும் கள்ளும் ஒத்த - கணவர் (தம்மோடு) செய்கின்ற கலவியும், மாதர்உண்ட கள்ளும் சமம் ஆயின.

எச்சங்கள் குறிக்கும் செயல்கள் எல்லாம் கலவிக்கும் கள்ளுக்கும் பொதுவாதலால், “கொழுநர் செய் கலவியும்” என மாற்றிக் கூட்டப்பட்டது. உதடு வெளுத்தல், பல் அடியில் இனிய நீர் சுரத்தல், ஆடையும் கச்சும் அவிழ்தல், கூந்தல் குலைதல், பரிகசித்தல் ஆகியவை மது வுண்ணல், கலவி புரிதல் ஆகிய இரு செயல் செய்வார்க்கும் பொது நிகழ்வுகள் ஆகும். அசதியாடல் - பரிகசித்தல். “ஒறுக்கப் படுவார் இவர் என்று அங்கு அசதியாடி” (சீவக. 1871) என்பது காண்க; கள் இச் செயல்களைச் செய்தலால், இவற்றைச் செய்யும் கொழுநரோடு அது ஒத்தது எனக் கிடந்தவாறே பொருள் கொள்ளினும் அமையும். “கொழுநரும் கள்ளும் ஒத்த” - இணை வழுவமைதி. உண்டாட்டுப் படலமாதலால் கள்ளுக்குச் சிறப்பளித்து அஃறிணை முடிவினை உயர்திணைக்கும் ஈந்தார். கள் உண்பார் அஃறிணைக்குச் சமம் எனக் கருதினார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Making lips like silk-cotton blossoms lose their red, making honey flow from the teeth,
  2. undoing the bodice over the breasts and the knot of the garment too,
  3. letting the tossing hair slip loose, and stirring up teasing laughter,
  4. the husbands making love and the toddy were alike.

What the poem says

Toddy and lovemaking do the same things to a woman. Her red lips turn pale, sweetness wells up in her mouth, her bodice and garment come undone, her hair tumbles down, and she starts laughing and teasing. So, the poet says, the husbands and the toddy are equals.

He uses a verb ending that properly belongs to things rather than people for both of them together. The commentary reads this as a sly hint that drinkers sink to the level of things.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ilavu itaḻ tuvar viṭa, eyiṟu tēṉ uka,
mulai micaik kaccoṭu kalaiyum mūṭṭu aṟa,
alai kuḻal cōrtara, acati āṭalāl,
kalavi cey koḻunarum kaḷḷum ottavē.