கம்பராமாயணம் 1060 · பால 17.24

Section பால காண்டம் / 17. உண்டாட்டுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கனை கழல் காமனால் கலக்கம் உற்றதை
அனகனுக்கு அறிவி, என்று அறியப் போக்கும் ஓர்
இன மணிக் கலையினாள்,'தோழி! நீயும், என்
மனம் எனத் தாழ்த்தியோ? வருதியோ?' என்றாள்.

பொருள் · Meaning in Tamil

கனைகழல் காமனால் கலக்கம் உற்றதை - ஒலிக்கும் வீரக்கழல்களை யணிந்த காமதேவனால், (காம நினைவால்) யான் கலக்கம் உற்றுள்ளேன் என்பதை; அனகனுக்கு அறிவி - குற்றமற்ற (என்) கணவனுக்கு அறிவிப்பாயாக; என்று அறியப் போக்கும் ஓர் இனமணிக் கலையினாள் - என்று கூறி (தன்தோழியை) பிரிந்துள்ள தன் கணவனிடம் அனுப்ப முன்வந்த உயர் மணிகள் அழுத்திய மேகலையணிந்த மாது ஒருத்தி; தோழி நீயும் என் மனம் எனத் தாழ்தியோ? வருதியோ? என்றாள் - (தன் தோழியை நோக்கி) “தோழியே! நீயும் என் மனத்தினைப் போல (அவனிடத்திலேயே) தங்கி விடுவாயோ? மீண்டு வருவாயோ?” என்று (ஐய வினா) எழுப்பினாள்.

என் மனம் என்னிடம் இல்லை என்பதை நயமுற விளக்கியவாறு. உண்டு களித்திருக்கும் இப்போது, அவன் இல்லாமையால் மன்மதன் அம்பால் மிக வருந்துகின்றேன்; அவனைச் சென்று உடனே அழைத்து வருவாயா? அல்லது என் மனம் போல, அவனிடமே இருந்து விடுவாயா? என்று ஓயாது அவனையே நினைத்திருக்கும் மனத்தை, தோழிக்குக் கூறுவாள் போல் சாடுகிறாள். நெஞ்சம் அவனிடம் சென்றது. “கெட்டார்க்கு நட்டார் இல் என்பதோ நெஞ்சே நீ பெட்டாங்கு அவர்பின் செலல்” (திருக். 1293).

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Tell my faultless lord of the turmoil I suffer from Kāmaṉ of the ringing anklets,'
  2. so said a woman with a girdle of matched gems, sending her friend off to let him know;
  3. then she said, 'My friend, will you too linger there, as my heart
  4. has done? Or will you come back?'

What the poem says

A woman whose husband is away sends her friend to tell him how desire is tormenting her. Then she has a worry. Her own heart went off to him long ago and has never come back. Will her friend stay with him too?

The question is a pretty way of saying that her heart is no longer her own, and of scolding it for deserting her. The Tirukkuṟaḷ likewise has a woman rebuke her heart for running after her lover.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kaṉai kaḻal kāmaṉāl kalakkam uṟṟatai
aṉakaṉukku aṟivi, eṉṟu aṟiyap pōkkum ōr
iṉa maṇik kalaiyiṉāḷ, 'tōḻi! nīyum, eṉ
maṉam eṉat tāḻtiyō? varutiyō?' eṉṟāḷ.