கம்பராமாயணம் 1063 · பால 17.27

Section பால காண்டம் / 17. உண்டாட்டுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மன்றல் நாறு ஒருசிறை இருந்து ஓர் வாள்நுதல் - மணம் வீசும் ஓர் இடத்திலே இருந்து கொண்டு, ஒளிபெறும் நெற்றியை யுடையாள் ஒருத்தி; தன் துணைக் கிள்ளையைத் தழீஇ - தனக்குத் துணையாகவுள்ள கிளியைத் தழுவி; என் ஆவியை இன்று போய்க் கொணர்கிலை - என் உயிர் நாயகனை இன்று (தூதாகப்) போய் அழைத்து வந்தாய் அல்லை; என் செய்வாய் எனக்கு - (இந்த உதவியைத் தவிர வேறு) எனக்கு என்ன உதவி செய்ய இருக்கிறாய்?; அன்றிலோடு ஒத்தி - (பிரிந்தாரைத் தன் ஒலியால் வருத்தும்) அன்றிலைப் போலவே நீயும் இருக்கிறாய்; என்று அழுது சீறினாள் - என்று கூறிப் புலம்பி வெகுண்டு கொதித்தாள்.

பிரிந்தாரைச் சேர்க்கும் உதவியிலும் பெரிய உதவி உலகில் வேறு இல்லை. நீ, போய் அவரை அழைத்து வாராமல் அவர் பெயரை மட்டும் ஓயாது கூவி என்னைத் துயர் உறுத்துகிறாய்; அன்றில் வெளியே கூவுகிறது; நீ உள்ளே கூவுகிறாய். ஆக, துயர் உறுத்துவதில் இரண்டுபேரும் ஒன்றே; இடமே வேறுபாடு என்கிறாள். மேல் பாடலில் கிளி கூவலில் மகிழ்ந்தாள். இப்பாடலில், அதுவும் வெறுத்தாள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Sitting in a corner sweet with fragrance, a bright-browed woman
  2. held her companion parrot close and said, 'You did not go today
  3. and bring back the one who is my life! What else will you ever do for me?
  4. You are no better than the aṉṟil bird,' and she wept and raged.

What the poem says

Another woman turns on her pet parrot. There is no greater kindness than bringing parted lovers together, yet the parrot will not fly off and fetch her husband. All it does is call out his name over and over, which only makes her ache more.

In Tamil poetry the cry of the aṉṟil, a bird said to live in inseparable pairs, torments lovers who are apart. The aṉṟil calls outside the house, the parrot calls inside, and both cause her the same pain.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1maṉṟal nāṟu oru ciṟai iruntu, or vāṇutal,
taṉ tuṇaik kiḷḷaiyait taḻīi, 'eṉ āviyai
iṉṟupōyk koṇarkilai; eṉ ceyvāy eṉakku?
aṉṟilōṭu otti' eṉṟu, aḻutu, cīṟiṉāḷ.