கம்பராமாயணம் 1074 · பால 17.38

Section பால காண்டம் / 17. உண்டாட்டுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஊட்டிய சாந்து வெந்து உலரும் வெம்மையான்,
நாட்டினை அளித்தி நீ, என்று நல்லவர்
ஆட்டும் நீர்க் கலசமே என்னல் ஆன ஓர்
வாள் தொழில் மைந்தற்கு ஓர் மங்கை கொங்கையே.

பொருள் · Meaning in Tamil

ஊட்டிய சாந்து வெந்து உலரும் வெம்மையால் - ஊட்டப்பெற்ற சந்தனக் குழம்பு வெந்து உலர்வதற்குக் காரணமான வெம்மையோடு கூடிய; ஓர் மங்கை கொங்கை - ஒரு மங்கையினுடைய தனங்கள்; ஓர் வாள் தொழில் மைந்தற்கு - வாளால் (போர்த்) தொழில் புரியும் ஒரு வீரனுக்கு; நீ நாட்டினை அளித்தி என்று நல்லவர் - நீ இந்த நாட்டினை (உன் போர்த்திறத்தால்) காப்பாயாக என்று கூறி, நல்லோர்கள்; ஆட்டுநீர்க்கலசம் என்னல் ஆன - பட்டாபிடேகஞ் செய்ய வைத்துள்ள (புனித) நீர்க்கலசங்களைப் போன்றிருந்தன.

இன்ப நாட்டிற்குரிய கலசங்களாதலின் இவ்வாறு கூறினார்; தற்குறிப்பேற்ற அணி.

நாடுகாக்கும் போருக்காகப் பிரிந்து, வென்றி வாகை சூடி வரும் தலைவனை வரவேற்கப் பூரண கும்பமேந்தி நிற்கின்றாள் என்க. அவன் பெற்ற துன்பம் எல்லாம் நீங்க இன்பநாட்டிற்கு அழைக்கும் பொற்கலசத்தோடு, “அந்த நாட்டை அளித்தாய்; இந்த நாட்டினையும் ஏற்பாயாக” என்று வரவேற்பது போன்றிருந்தன பொங்கும் கொங்கைப் பொற்குடங்கள் என்பது கருத்து.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Hot enough to bake and dry the sandal paste smeared on them,
  2. like the jars that good men bring, saying, 'You shall guard the land,'
  3. filled with the water of anointing, so they seemed to a
  4. warrior whose trade was the sword: the breasts of one woman.

What the poem says

A warrior comes home from guarding the kingdom. His wife's breasts, hot enough with longing to dry the sandal paste on them, look to him like the full golden jars of holy water that elders bring when they crown a king and ask him to protect the land.

The poet imagines her welcoming her victorious husband with these jars, as if to say: you have guarded that kingdom, now take this kingdom of pleasure too.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ūṭṭiya cāntu ventu ularum vemmaiyāl,
nāṭṭiṉai aḷitti nī, eṉṟu nallavar
āṭṭu nīrk kalacamē eṉṉal āṉa ōr
vāḷ toḻil maintaṟku ōr maṅkai koṅkaiyē.