கம்பராமாயணம் 1073 · பால 17.37

Section பால காண்டம் / 17. உண்டாட்டுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஏய்ந்த பேர் எழிலினான் ஒருவன் - பேரழகு அமைந்தவனான ஒருவன்; எய்தினன் - (பிரிவால் வருந்தும் தன் மனையாள் இருக்கும் பள்ளியறையை) அடைந்தான்; அனங்கன் வெங்கணை வேய்ந்த போல் எங்கணும் பாய்ந்த பூம்பள்ளியில் - மன்மதனது கொடுங்கணைகள் எங்கும் பரவிக் கிடப்பனபோல் மலர்கள் பரவிக் கிடந்த மலர்ப்படுக்கையில்; படுத்த பல்லவம் தீய்ந்தன நோக்கினன் - (அவள் சாய்ந்த போது) பரப்பிய தளிர்கள் அத்தனையும் கருகிப் போவதைப் பார்த்தான்; திகைக்கும் சிந்தையான் - (தன் பிரிவு பாதித்துள்ள அளவினை அறிந்து) திகைப்புற்ற மனமுடையோன் ஆனான்.

தன்னை அவன் பிரிவு எவ்வளவு பாதித்துள்ளது என்பதனைத் தளிர்களின் மேல் சாய்ந்து காட்டினள் என்க. வெப்பத்தைக் குறைக்க, படுக்கையில் பரப்பியுள்ள தளிர்கள் இவன் இல்லாத போது, காமன்விட்ட கணைகள் போன்றிருந்தன என்பார், “அனங்கன் வெங்கணை வேய்ந்த போல் பாய்ந்த பல்லவம்” என்றார். “எழிலினான் ஒருவன் எய்தினன்; பல்லவம் தீய்ந்தன நோக்கினன்; திகைக்கும் சிந்தையான்” எனக் கூட்டுக.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. A man of great beauty arrived;
  2. as if thatched all over with the fierce arrows of the bodiless god,
  3. on the flower bed they had pierced, the tender leaves spread there
  4. he saw all scorched, and stood with his mind stunned.

What the poem says

A handsome man comes back to the room where his wife has lain pining. Cool young leaves were spread on her bed to ease the fever of separation, but while he was away they felt to her like the love god's arrows covering the bed.

Now he sees that the leaves have shrivelled and burned from the heat of her body. He stands stunned at how much his absence has made her suffer.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ēynta pēr eḻiliṉāṉ oruvaṉ, eytiṉāṉ;
vēyntapōl eṅkaṇum aṉaṅkaṉ veṅ kaṇai
pāynta pūm paḷḷiyil paṭutta pallavam
tīyntaṉa nōkkiṉāṉ tikaikkum cintaiyāṉ.