கம்பராமாயணம் 1076 · பால 17.40

Section பால காண்டம் / 17. உண்டாட்டுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஆலைமென் கரும்பு அனான் ஒருவற்கு - ஆலையில் அரைபட்ட மெல்லிய கரும்பு போலப் (பிரிவுத் துயரால்) வருந்திய ஒரு வீரனுக்கு; ஆங்கு ஒரு சோலைமென் குயில் அனாள் - அங்கு, சோலையில் உள்ள மெல்லிய குயில் போன்ற குரல் உடையாள் ஒருத்தி; சுற்றி வீக்கிய மாலையை - (அவனைச்) சுற்றிக் கட்டிய (மலர்) மாலையை; வயிரத் தோள்கள் நிமிர்ந்தில - அவ்வீரனுடைய வயிரம் போன்ற வலிய தோள்கள் மீறி நிமிர்ந்தெழ இயலவில்லை; ஏலும் இவ்வன்மையை என் என்று உன்னுதும்? - அவனைக் கட்டியுள்ள இம் மாலையில் அமைந்துள்ள வலிமையை என்னென்று கருதுவோம்?

காதலின் வலிமையை மாலையின் மேலிட்டுக் கூறியவாறு. வயிரத்தோள்கள் அவனுடையவை - ஆனால், மாலையை அறுக்க மாட்டாத வயிரத்தோள்கள் என வியந்தார். மாலையால் காதலரை மங்கையர் கட்டுதல்: “எல்லியம்போது இனிதிருத்தல் இருந்ததோர் இடவகையில், மல்லிகைமா மாலை கொண்டு அங்கு ஆர்த்தமோர் அடையாளம்” (பெரியாழ். திரு. 3: 10 :2); “கங்குல் பால் புகுந்த கள்வன் இவன் எனக் கதுப்பில் தாழ்ந்த தொங்கலால் முன்கை யாத்து” (சீவக. 1988) என வருதல் காண்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. What shall we make of a strength like this?
  2. For a man crushed like soft cane in the mill, there a
  3. woman gentle as a cuckoo in the grove wound and bound
  4. a garland about him, and his diamond-hard shoulders could not break free!

What the poem says

A warrior, worn down by separation like sugarcane crushed in a press, is tied up by his wife with a flower garland. His shoulders, hard as diamond, cannot snap it.

The poet wonders at the strength of a string of flowers. Of course it is not the flowers that hold him but love. Playfully tying a lover with a garland is an old motif, found also in the devotional poems of Periyāḻvār and in the Cīvakacintāmaṇi.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ēlum iv vaṉmaiyai eṉ eṉṟu uṉṉutum;
ālai meṉ karumpu aṉāṉ oruvaṟku āṅku oru
cōlai meṉ kuyil aṉāḷ cuṟṟi vīkkiya,
mālaiyai nimirntila vayirat tōḷkaḷē!