கம்பராமாயணம் 1077 · பால 17.41
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
சோர் குழல் ஒருத்தி - தாழ்ந்த கூந்தலையுடையாள் ஒருத்தி; தன் வருத்தம் சொல்லுவான் - தனது வருத்தத்தைச் சொல்லும் பொருட்டு; மாரனை நோக்கி ஓர் மாதை நோக்கினாள் - சித்திர கூடத்திலிருந்து மன்மதனின் ஓவியத்தைப் பார்த்து, தன் தோழியை நோக்கினாள்; காரிகை இவள், அவள் கருத்தை நோக்கி - அத்தோழி, தான் மன்மதன் கணையால் வருந்தும் எனும் கருத்தை, (குறிப்பால்) அவள் உணர்த்துகிறாள் என்பதை தன் (குறிப்பால் அறிந்து); ஓர்வேரியம் தெரியலான் வீடுநோக்கினாள் - தேனுடைய மாலையை யணிந்த அவள் கணவன் இருக்கும் மனையை நோக்கி நடக்கலுற்றாள்.
“தாம் உறு காமத்தன்மை தாங்களே உரைப்பது என்பது அருங்குல மகளிர்க்கு ஆகாது” (கம்ப.) ஆதலின், குறிப்பால் உணர்த்தியவாறு. சொல்லுவான் - வினையெச்சம், காரணப்பொருட்டு. மன்மதனை நோக்கியது; அவனால் படும் வருத்தம் உரைக்க. மாதை நோக்கியது: அவ்வருத்தம் உன்னால் தான் களையப்படவேண்டும் என்பது குறிக்க. தோழி, இவள் வருத்தம் போக்க, அவன் வரவேண்டும் எனும் குறிப்புணர்ந்து கணவன் இருக்குமிடம் நோக்கினாள். “குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள் யாது கொடுத்தும் கொளல்” (திருக். 703).
ஆங்கிலம் · English translationAI
Translation
- A woman with tresses slipping loose, to tell of her pain,
- looked at Māraṉ, then looked at another woman;
- and that girl, reading what was in her mind,
- set off toward the house of the man with the honeyed garland.
What the poem says
A wellborn woman may not speak her desire aloud, so this woman says it without words. She glances at a painting of Māraṉ, the love god, to show what is troubling her, then glances at her friend, to show that the friend must do something about it.
The friend understands at once and sets off for the husband's quarters to bring him. The Tirukkuṟaḷ prizes those who can read an unspoken hint as worth any price.