கம்பராமாயணம் 1078 · பால 17.42
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
சினம்கெழு வாள்கை ஓர் செம்மல் பால் - வெகுளி மிகும் வாளைக் கையில்கொண்டுள்ள ஒரு வீரனிடத்து; ஒரு கனம் குழை மயில் அனாள் கடிது போயினாள் - பொற்குழை யணிந்த மயில் போன்றாள் ஒருத்தி, விரைந்து சென்றாள்; அழைத்த தூதர் - (அவ்வாறு அவள் தானே விரைந்து செல்வதற்குக் காரணமாய்) அவளை அழைத்த தூதுக்குரியவர்; மனம் குழை நறவமோ? - மனத்தைக் குழையச் செய்யவல்ல மது தானோ?; மாலை தான்கொலோ? - மாலைப்பொழுது தானோ?; அனங்கனோ? யார்கொலோ? - மன்மதன் தானோ? வேறு யாரேனுமோ? (யார் அறிவார்?)
கொல் - அசைநிலைகள். ஐயம் எனினுமாம். மதுவும், மாலையும், மன்மதனும் நாண்துறந்து ஏகுமாறு காமவேட்கையை மிகுவிக்கும் பொருள்களாம் என்றவாறு. அவளுக்குரிய நாணைப் பிரித்து அழைத்துச் செல்லுதலின் கள்ளோ என்றும், புலப்படா நிறம் தருதலின் மாலையோ என்றும், ஊரார் உற்று நோக்காது விரைந்து செலுத்துதலின் அநங்கனோ என்றும் ஒன்றும் துணிய இயலாமையின் ஐயுற்று யார்கொலோ என்றும் கூறினார். கள், நாணம் போக்கும் என்பது: “நாண் என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள் என்னும் பேணாப் பெருங்குற்றத்தார்க்கு” (திருக். 924). “உடம்பும் உயிரும் வாடியக் காலும், என்னுற்றன கொல் இவையெனின் அல்லது, கிழவோற் சேறல் கிழத்திக்கு இல்லை” (தொல். பொருளியல் 9) என்பராதலின், மரபை மீறி இவள் காதலனை நோக்கிச் சென்றதற்குக் காரணம் மதுவா, மாலையா, மன்மதனா? இல்லை மூன்றுமா? எனத் தெரியோம் என்ற போக்கில் அதிகாரத்தால் மதுவைப் பழித்தவாறு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- To a lord with a sword in his wrathful hand, one woman
- like a peacock, with heavy gold earrings, went in haste;
- was it the heart-melting wine, was it the evening,
- was it the bodiless god, or who was it, the messenger that called her?
What the poem says
Old Tamil convention held that a wife should never go to her husband of her own accord, however much she suffered. This woman hurries straight to him.
The poet asks who sent for her. Was it the wine, which strips away modesty? The evening, whose dusk hides her? The love god, who drives her on? Or all three? Since this is the canto of the drinking feast, the question also quietly blames the drink.