கம்பராமாயணம் 1079 · பால 17.43
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தொகுதரு காதற்குத் தோற்ற - நிறைந்த காதலின் ஆற்றற்குத் தோற்றுப்போன; சீற்றத்து ஓர்வகிர்மதி நெற்றியாள் - வெகுளியையுடைய (எண்ணாட்) பிறை போன்று வகிர்ந்த நெற்றியினையுடையாள் ஒருத்தி; மழைக்கண் ஆலிவந்து உகுதலும் - (பிரிவுத் துயர் வெளிப்படுமாறு) மழைபோன்று கண்களிலிருந்து கண்ணீர்த் துளிகளை விட்டவுடன்; உற்றது என்? என்று கொற்றவன் நகுதலும் - உனக்கு என்ன நேர்ந்தது? என்று கணவன் சிரித்த அளவில்; நாணும் நீங்கினாள் - (அவளும் நாணம் நீங்கி); நக்கனள் - சிரித்து மகிழ்ந்தாள்.
நான் வந்தது அழுகைக் குரியதோ? சிரித்து மகிழ்தற்கு உரியதோ? மகிழ்விற்குரியது எனின் நீ சிரித்தாக வேண்டும் என, வேறு வழியின்றி, நாணம் விட்டுச் சிரித்தனள் என்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- One whose anger had lost out to her gathering love,
- a woman with a brow like a sliver of moon, felt the tears come from her rain-dark eyes
- and fall; and when her lord said, 'What has happened to you?'
- and laughed, she laughed as well, and her shyness left her.
What the poem says
A wife was angry with her husband, but her love was stronger than her anger. When he comes, she bursts into tears.
He laughs and asks her what is the matter, as if to say: is my coming something to cry about or to be glad about? If it is something to be glad about, then laugh. She has no answer, so her shyness goes and she laughs with him.