கம்பராமாயணம் 1093 · பால 17.57
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பொரு அரு மதனன் போல்வான் ஒருவனும் - (அழகில் தனக்கு) உவமை சொல்ல ஒருவனும் இல்லாத மன்மதனைப் போல்வான் ஒருவனும்; பூவின் மேல் அத் திருவினுக்கு உவமை சால்வாள் ஒருத்தியும் - (தாமரை) மலர் மேல் வாழும் மங்கையாகிய திருமகளுக்கு உவமிக்கத் தகுதியுடையாள் ஒருத்தியும்; சேக்கைப் போரில் - மஞ்சத்தில் நிகழ்ந்த கலவிப் போரிலே; ஒருவருக்கு ஒருவர் தோலார் ஒத்தனர் - ஒருவருக்கு ஒருவர் பின்னடையாமல் சமநிலையிலேயே (இன்பப் போர் புரிதலில்) இருந்தனர்; இருவரது உயிரும் ஒன்றே உணர்வும் ஒன்றே என்ற போது யாவர் வெல்வர் - ஏன் எனில் இருவருக்கும் உயிரும் உணர்ச்சியும் ஒன்றேயாக இருக்கையில் யார் வெல்ல இயலும்? (யார் தோற்க இயலும்?)
உடல் அன்றி உயிர் ஆற்றலும் உணர்வாற்றலுமே வெற்றி தோல்வியை நிர்ணயிப்பன; அவை இரண்டும் இவ்விருவர்க்கும் சமம் ஆதலின், கலவிப் போரில் ஒருவர்க்கொருவர் தோற்காமல் போர் புரிந்தனர். ஒருவரும் தோற்க இயலாத போது ஒருவரும் வெற்றி பெறலும் இயலாது என்பார், “ஒருவருக்கு ஒருவர் தோலார் ஒத்தனர்” என்றும், காரணம், “இருவரது உயிரும் ஒன்றே; உணர்வும் ஒன்றே என்றபோது யாவர் வெல்வார்?” என்றார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- A man like Mataṉaṉ, who has no rival, and a woman
- fit to be likened to Tiru who sits upon the flower, in the battle of the bed
- neither gave way to the other; they were evenly matched; their life was one,
- the feeling of the two was one; and when that is so, who could ever win?
What the poem says
A couple as handsome as the love god and as lovely as the goddess Tirumakaḷ on her lotus make love. Poets often describe lovemaking as a battle, but in this one neither gives ground.
The poet explains why. Victory depends not on the body but on the strength of life and feeling, and these two share a single life and a single feeling. When neither can lose, neither can win.