கம்பராமாயணம் 1092 · பால 17.56

Section பால காண்டம் / 17. உண்டாட்டுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பொன் அரும் கலனும், தூசும், புறத்து உள துறத்தல் வம்பு ஏ!
நல் நுதல் ஒருத்தி, தன்பால் அகத்து உள நாணும் நீத்தாள்;
உன் அரும் துறவு பூண்ட உணர்வு உடை ஒருவனே போல்,
தன்னையும் துறக்கும் தன்மை காமம் அத்து ஏ தங்கிற்று அன்று ஏ.

பொருள் · Meaning in Tamil

புறத்துள் பொன் அரும் கலனும் தூசும் துறத்தல் வம்போ? - (உடலின்) வெளியேயுள்ள அணிகலன்களையும் ஆடைகளையும் (ஒரு மங்கை) துறந்தாள் (முன்பு) புகன்றது (ஒரு) புதுமையோ?; நல்நுதல் ஒருத்தி - அழகிய நெற்றியினையுடையாள் ஆகிய (இன்னும்) ஒருத்தி; தன்பால் அகத்துள் நாணும் நீத்தாள் - தன்னிடத்தே, (பிரிதற் கியலால் கிடந்த) உடலின் உள் உள்ள நாணத்தையும் துறந்துவிட்டாள்; உன்ன அருந்துறவு பூண்ட உணர்வுடை ஒருவனே போல் - நினைப்பதற்கும் அருமையான துறவினைப் பூண்ட மன உறுதிமிக்க ஒரு துறவியைப்போல; தன்னையும் துறக்கும் தன்மை காமத்தே தங்கிற்று அன்றே! - தான் என்று சொல்லத் தக்கதையும் துறந்து விடக்கூடிய இயல்பு, காமத்தினிடத்தில் மட்டுமே தங்கியுள்ளதன்றோ?

கலனும் தூசும் அகற்றியபின் வரும் நாணுந்துறந்து அவசமுற்றிருந்தாள். உயிரினும் சிறந்தது பெண்மைக்கு நாணம் (தொல். கல. ) ஆதலின், அதனைத் துறத்தல், தன்னையே துறத்தல் ஆயிற்று. “காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும் நாணுத்தாழ் வீழ்த்த கதவு” (திருக். 1251) - வேற்றுப் பொருள் வைப்பணி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Is it anything new to give up the gold, the precious jewels and the clothes that are on the outside?
  2. A woman with a fair brow gave up even the modesty that lay within her;
  3. as with a man of understanding who has taken up a renunciation beyond imagining,
  4. the power to give up even one's own self is found in desire alone.

What the poem says

Shedding jewels and clothes is nothing remarkable. This woman sheds her modesty too, which lies inside her. Modesty was held to be dearer to a woman than life itself, so giving it up is like giving up her very self.

The poet draws a surprising parallel. Only the greatest ascetic can renounce his own self, and only desire can make a person do the same. The Tirukkuṟaḷ speaks of desire as an axe that breaks down the door of modesty.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1poṉ aruṅ kalaṉum, tūcum, puṟattu uḷa tuṟattal vampō!
nalnutal orutti, taṉpāl akattu uḷa nāṇum nīttāḷ;
uṉ arun tuṟavu pūṇṭa uṇarvuṭai oruvaṉēpōl,
taṉṉaiyum tuṟakkum taṉmai kāmattē taṅkiṟṟu aṉṟē.