கம்பராமாயணம் 1091 · பால 17.55

Section பால காண்டம் / 17. உண்டாட்டுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நறைகமழ் அலங்கல் மாலை நளிர் நறும் குஞ்சி மைந்தர் - தேன் மணம் மிகுந்து அசைகின்ற மலர் மாலை சூடிச் செறிந்து மணம் வீசும் குடுமியினையுடைய ஆடவர்கள்; துறை அறி கலவி செவ்வித் தோகையர் தூசு வீசி - இன்பக் கலவியின் துறைகளையறிந்து பக்குவமுற்ற மகளிரின் ஆடைகளை அப்பால் எறிந்துவிட்டு; நிறை அகல் அல்குல் புல்கும் கலன் கழித்து அகல நீத்தார் - (மேலும்) நிறைந்து அகன்ற இடைப் பகுதியைத் தழுவியிருந்த மேகலையென்னும் அணியையும் வெறுத்து அப்பால் வீசினர்; அறைபறை யனைய நீரார் - (ஏன் எனில்) (செய்திகளைக் கூவி) அறைகின்ற பறை போன்று (எப்போதும் வாய்விட்டுக் கத்தும்) தன்மையினர்; அருமறைக்கு ஆவரோ? - வெளிப்படுத்தக் கூடாத இரகசியச் செயல் நிகழ்கையில் உடன் இருக்கும் தகுதியுடையார் ஆவாரோ? (ஆகார்)

தான் - அசை. “தாம் கேட்ட மறை பிறர்க்கு உய்த்து உரைக்கலான் அறைபறை யன்னர் கயவர்” என்னும் திருவள்ளுவப் பெருந்தகையின் திருக்குறள் (1076) கருத்தை, பொன்னணியில் பதித்த நல் மணியாய்ப் பொதிந்து ஒளிரச் செய்துள்ளார் - வேற்றுப்பொருள் வைப்பணி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The men, their thick, fragrant topknots wreathed with swaying garlands sweet with honey,
  2. skilled in the arts of love, flung off the garments of the peacock-like women, now ready,
  3. and stripped away and cast far off the girdles that clasped their full, broad hips;
  4. can things that are like a beaten drum be trusted with a secret?

What the poem says

The men undress their wives, throwing aside first their clothes and then their jingling jewelled girdles.

The poet gives a reason for getting rid of the girdles. Like a drum beaten to announce news in the street, they cannot keep quiet, so they are not fit to be present at a secret. The thought sets a couplet of the Tirukkuṟaḷ, which compares mean people who spread secrets to a beaten drum, like a gem in a gold setting.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1naṟai kamaḻ alaṅkal mālai naḷir naṟuṅ kuñci maintar
tuṟai aṟi kalavic cevvit tōkaiyar tūcu vīci
niṟai akal alkul pulkum kalaṉ kaḻittu akala nīttār
aṟai paṟai aṉaiya nīrār aru maṟaikku āvarōtāṉ.