கம்பராமாயணம் 1090 · பால 17.54
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தனங்களின் இளையவர் தம்மின் மும்மடி - தனங்களையுடைய இள மகளிர்களைக் காட்டிலும் மும்மடங்காக; கனம் கனம் இடை இடைக் களிக்கும் கள்வன் ஆய் - மிக அதிகமாக அவ்வவ்விடங்களில் களிப்புக் கொண்டு (யார்க்கும் தெரியாமல்) கள்வனைப் போல்; மனங்களில் நுழைந்து - (ஆடவர் பெண்டிர் ஆகிய இருபாலார்) மனங்களுக்குள்ளே புகுந்து; அவர் மாந்து தேறலை - அவர்கள் பருகின மதுவின் தெளிவினை; அனங்கனும் அருந்தினான் ஆதல் வேண்டும் - மன்மதனும் உண்டிருப்பான் ஆதல் வேண்டும்.
ஆல் - அசை. மன்மதன் சித்தத்தில் உதிப்பவன் எனும் பொருள் தரும் “சித்தசன்” எனும் பெயருடையான் ஆதலின், உள்வந்த மதுவை, உள்ளே உள்ள இவனும் உண்டிருப்பானாதலினால் அங்கிருப்பாரினும் அவன் மும்மடங்கு (மகிழ்வில்) பொலிந்தான் என்றார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Three times more than the full-breasted young women,
- reeling with joy, more and more, here and there, like a thief,
- slipping into their hearts, the clear wine they drank
- Aṉaṅkaṉ himself must surely have drunk as well.
What the poem says
The love god is said to be born in the mind, and one of his names means just that. So when the women drink, he must be drinking too, from inside their hearts, where he has crept in like a thief.
That, says the poet, is why the god of love is three times as merry as the drinkers themselves, and why desire runs so wild in the camp tonight.