கம்பராமாயணம் 1095 · பால 17.59
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பால் உள பவளச் செவ்வாய் - பால் போன்ற சுவையும் பவளம் போன்ற சிவந்த நிறமும் உடைய வாயினையும்; பல்வளை பணைத்த மென்தோள் - பல்வகை வளையல்கள் (அணிந்த கைகளையுடைய) பெருத்த தோள்களையும்; வேல் உள நோக்கினாள் ஓர் மெல்லியல் - வேலினையொத்த விழிகளையுமுடைய ஒரு மெல்லியலாள்; வேலையன்ன மால் உள சிந்தையின் - கடல் அனைய காதல் மனம் கொண்டவனும்; ஓர் மழை உள தடக்கையாற்கு - (கைம்மாறு கருதாது கொடுப்பதனால்) மேகத்தை ஒத்து நீண்ட கைகளையுடையவனான ஒருவனுக்கு; மேல் உள அரம்பை மாதர் என்பதோர் விருப்பை ஈந்தாள் - வான் உலகில் உள்ள அரம்பை மாது இவள் என்று கருதத் தக்க பேரின்பத்தினை அளித்தாள்.
கறையற்ற காதல், வானகத்து இன்பத்தை எல்லாம் மண்ணுக்குக் கொண்டு வரவல்லது என்றபடி. “வேலையன்ன மால்” என்பது கடலன்ன காமம் (திருக். 1137) எனும் குறட்பகுதியோடு ஒத்தது. வானுலக இன்பத்தை வையகத்தே தந்ததாலும் குன்றாது கொடுத்ததாலும், அவள் விண்ணுலக அரம்பை ஆயினாள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- A gentle woman with a coral-red mouth that held milk, many bangles, swelling bamboo shoulders,
- and eyes like spears, to a man whose heart held a love
- as vast as the sea, a man with long hands as generous as the rain,
- gave a delight that made one think her one of the Arampai maidens of the sky.
What the poem says
A sweet-lipped, spear-eyed woman and a man whose love is as vast as the sea and whose hands give as freely as rain clouds spend the night together. She gives him such delight that he might think she was one of the Arampai, the dancing women of heaven.
Pure love, the poet suggests, can bring all the joys of heaven down to earth. The phrase "a love like the sea" echoes the Tirukkuṟaḷ.