கம்பராமாயணம் 1098 · பால 17.62
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மங்கையர் இளநலம் மைந்தர் உண்ண - மாதர்களுடைய புதிய இன்பத்தை ஆடவர் நுகர்கையில்; குங்குமம் உதிர்ந்தன - (மங்கையர் மார்புக்) குங்குமக் கோலங்கள் உதிர்ந்தன; கோதை சோர்ந்தன - கூந்தல்கள் அவிழ்ந்தன; சங்கு இனம் முரன்றன - (கையில் அணிந்திருந்த) சங்கு வளையல்கள் ஆரவாரித்தன; கலையும் சாறின - ஆடைகளும் நழுவின; சிலம்புகள் பொங்கின பூசல் இட்டன - காலில் உள்ள சிலம்புகள் மிகுந்து ஒலி செய்தன.
ஒரு செயலுக்காக இத்தனை செயல்கள் நிகழ்ந்தன என வியந்தவாறு. மங்கையர் இளநலம் மைந்தர் உண்ண - குங்குமம் உதிர்ந்தன; கோதைகள் சோர்ந்தன; சங்கு இனம் முரன்றன; கலைகள் நழுவின; சிலம்புகள் பொங்கின; பூசல் இட்டன எனக் கூட்டுக. மைந்தர்கள் உண்பதற்காக மங்கையரிடத்தே இளமையும் நலமுமாகிய பெருவிருந்து படைத்து வைக்கப்பட்டுள்ளமையறிந்து துய்த்து மகிழ்ந்தனர் என்க. முதல் மூன்றடிகளிலும் ஒரு போர்க்களத்தின் சூழலைச் சுட்டினார், கலவிப் போர் ஆதலின்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The saffron designs crumbled away; the garlands slipped loose;
- the conch bangles clamoured; the garments slid off;
- the anklets rose and raised a din,
- as the men drank deep of the young women's fresh beauty.
What the poem says
The poet marvels at how many things happen for the sake of one. As the men enjoy their wives, the saffron patterns on the women's breasts crumble, their hair comes undone, their conch-shell bangles clash, their clothes slip off and their anklets ring out.
The first three lines are worded like a battlefield, with conches sounding and a din rising. Lovemaking is once again pictured as a battle.