கம்பராமாயணம் 1099 · பால 17.63
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
காதல் - காதலானது; துனிஉறு புலவியை - துயர்மிகச் செய்யும் ஊடலை; சூழ் சுடர்பனி எனத் துடைத்தலும் - (கதிரவன் சுற்றிப் பரப்பும் கிரணங்களால்) பனியை அழிப்பது போல நீக்கி விட்டவுடன்; புனை இழை ஒருமயில் - அணிகள் அணிந்த மயில் அனைய ஒரு மங்கை; பதைக்குஞ் சிந்தையாள் - (ஊடல் நீங்கியவுடன் கூடத்) தவிக்கும் மனம் உடையவளாய்; பொய் உறங்குவாள் - (உடனே தழுவின் தன் பெருமை குன்றும் என்று) உறங்குபவள் போல் பொய்யாக உறங்கி; கனவு எனும் நலத்தினாள் கணவற் புல்லினாள் - (அஞ்சத்தக்க கனவு கண்டவள் போல) கனவு தரும் நல் உதவியினால் கணவனை இறுகத் தழுவிக் கொண்டாள்.
பள்ளியறையில் “கிழவோள் உயர்வு” (தொல். பொருள். 31) பாதிக்கப் படாதிருக்க நிகழும் சாகசங்களுள் ஒன்று சுட்டியவாறு. கதிரவன் பனியைத் துடைத்தல் போல் காதல் ஊடலைத் துடைத்தது. வலியத் தழுவின் பெண்மையின் உயர்வு தாழும் என்று, பொய் உறக்கம் கொண்டு, அதில் பொய்க் கனவும் கண்டு, அச்சக் கனவால் அணைப்பாள் போல் அணைத்து மகிழ்ந்தாள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- When love, like the sun's spreading rays, wiped away like dew
- the sulking that causes such pain, her heart all aflutter,
- one jewelled, peacock-like woman pretended to sleep,
- and, with the kind help of a dream, embraced her husband.
What the poem says
Love has melted away a wife's sulking as the sun burns off the dew. Now she longs to hold her husband, but embracing him outright would cost her dignity, which the rules of love say a wife must keep.
So she pretends to fall asleep, then pretends to have a frightening dream, and clings to him as if in terror. The dream gives her an excuse.