கம்பராமாயணம் 1100 · பால 17.64

Section பால காண்டம் / 17. உண்டாட்டுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வட்டவாள் முகத்து ஒருமயிலும் மன்னனும் - வட்டமாகிய ஒளிமுகமுடைய ஒரு மயில் போன்றாளும் (அவள்) கணவனும்; கிட்டிய போது உடல் கிடைக்கப் புல்லினார் - (ஒருவர்க்கொருவர்) நெருங்கியபோது, கிடைக்க (இறுகத் தழுவ ஏற்ற வாய்ப்பொன்று) கிட்டியதனால் தம் உடல் இறுகத் தழுவினர்; ஒட்டிய உடல் பிரிப்பு உணர்கிலாமையால் - (ஒன்றாக) ஒட்டிக் கொண்ட உடல்களை, (இரண்டாகப்) பிரிக்க அறிய மாட்டாமையால்; விட்டிலர்; கங்குலின் விடிவு கண்டிலர் - தழுவிய கரங்களை விடாதவர் ஆயினர்; இரவு விடிந்து போனதையும் அறியாதவர் ஆயினர்.

ஒன்று தெரிந்து ஒன்று தெரியாமையால் உற்ற இடர் உரைத்தவாறு. தழுவத்தெரிந்தது; விடத் தெரியவில்லை. இரவு விட்டதும் தெரியாது, தழுவல் விடாமல் கிடந்தனர் என்பார், “விட்டிலர் கங்குலின் விடிவு கண்டிலர்” என்றார். “குக்கூ என்றது கோழி; அதன் எதிர் துட்கென் றன்றென் தூய நெஞ்சம்” (குறுந். 157) எனக் காதலர் விடியலை விரும்பாமை கூறப்படும். “காதலற் பிரியாமல் கவவுக்கை நெகிழாமல்” (சிலம்பு. 1: 61-62) வாழும் வகை இது. வீழும் இருவர்க்கு வழியிடைப் போழப் படா முயக்கு இனிது (திருக்.) என்பார் வள்ளுவனாரும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. A peacock-like woman with a round, bright face, and her king,
  2. when they came close, found their chance and held each other tight;
  3. they did not let go; they never saw the night turn to dawn,
  4. because they did not know how to part bodies that had grown together.

What the poem says

A couple embrace as soon as they get the chance, and then they do not know how to come apart. Their bodies seem stuck together. They knew how to hold on but not how to let go, and so they lie clasped until dawn without noticing that the night has ended.

Old Tamil love poems often have lovers dreading the cock's crow at daybreak.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vaṭṭa vāḷ mukattu oru mayilum, maṉṉaṉum,
kiṭṭiya pōtu uṭal kiṭaikkap pulliṉār;
viṭṭilar; kaṅkuliṉ viṭivu kaṇṭilar
oṭṭiya uṭal pirippu uṇarkilāmaiyāl.