கம்பராமாயணம் 1101 · பால 17.65

Section பால காண்டம் / 17. உண்டாட்டுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அருங்களி மால்களிறு அனைய வீரர்க்கும் - (தணித்தற்கு) அரிய மதமயக்கம் கொண்ட ஆண் யானைகளைப் போன்ற வீரர்கட்கும்; கருங்குழல் மகளிர்க்கும் - கரிய கூந்தலுடைய மகளிர்க்கும்; கலவிப் பூசலால் - (நிகழ்ந்த) கலவிப் போரில் மிதிபட்டதனால்; அம்மாலைக் கங்குல் நெருங்கிய வனமுலை சுமக்க நேர்கலா மருங்குல் போல் தேய்ந்தது - அந்த மயக்கந்தரும் இரவு (ஒன்றோடொன்று) நெருங்கியுள்ள அழகிய தனங்கள் சுமப்பதற்கு ஆற்றலற்ற (மங்கையர்) இடையினைப் போல் வரவரக் (குறைந்து) தேய்ந்து போயிற்று.

மழ களிறு அனையார்க்கும் மயில் அனையார்க்கும் இடை நிகழ்ந்த கலவிப் போரில் இடையே சிக்கிய இரவு, “தேய்புரி பழங்கயிறு போல” (நற். 284) மகளிர் இடையாய்த் தேய்ந்தது என்க. மாலைக் கங்குல், வீரர்க்கும் மகளிர்க்கும் கலவிப் பூசலால், வனமுலை சுமக்கலா மருங்குல் போல் தேய்ந்தது எனக் கூட்டுக - தற்குறிப்பேற்ற அணி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. In the battle of love between warriors like great tuskers in a rut past taming
  2. and women with dark tresses,
  3. like a waist too slight to bear the lovely breasts crowding upon it,
  4. that bewitching night wore thin and wasted away.

What the poem says

The night, caught between men like rutting elephants and women like peacocks in their battle of love, gets trampled underfoot. It grows thinner and thinner until it is gone.

It wears away like the women's slender waists, which can hardly bear the weight of their breasts, or like an old rope fraying. As so often, the poet invents a cause of his own for the coming of dawn.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aruṅ kaḷi māl kaḷiṟu aṉaiya vīrarkkum
karuṅ kuḻal makaḷirkkum kalavip pūcalāl
neruṅkiya vaṉa mulai cumakka nērkalā
maruṅkul pōl tēyntatu am mālaik kaṅkulē.