கம்பராமாயணம் 1102 · பால 17.66
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நல்நெறி கடையுறக் காண்கிலா தவர்க்கு - புண்ணியச் செயல்களை முடிவு வரை முற்றச் செய்யாதவர்கட்கு; இடை உறு திருவென இந்து நந்தினான் - நடுவே (சில காலம் சேர்ந்திருந்த) செல்வம் (இடையே) அழிவது போல் சந்திரன் மறைந்தான்; பரமன் மார்பிடை சுடர் மணிக்கு அரசு என - பரம்பொருளாகிய திருமாலின் மார்பினிடையே ஒளிர்கின்ற, மணிகளுக்குள் அரசாகிய கவுத்துமணி (தோன்றுவது) போல; படர்திரைக் கருங்கடல் இரவி தோன்றினான் - பரவிய அலைகளையுடைய கரிய கடலிடையே சூரியன் தோன்றினான்.
நெறி: நெறி காட்டும் புண்ணியச் செயல்களைக் குறித்தது; ஆகுபெயர். இறுதி வரை நற்செயல்களைக் கடைப்பிடியாது போவார் வாழ்க்கை இருள் சூழும் என்பதாயிற்று. தற்குறிப்பேற்றுதலில் தனக்குரிய தனித்துவத்தை இப்பாடலிலும் கவிஞர்பிரான் ஏற்றியுள்ள எழில் கண்டு மகிழ்க. திருமால் மார்பில் உள்ளது கவுத்துவ மணி. தன் அருகில் உள்ள திருமகளாம் சீதையெனும் பெண்மணியை மணக்க உள்ள காலமும் அருகில் உள்ளதென நினைப்பித்தவாறு. சுடர்மணிக்கு அரசு - கவுத்துவ மணி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As, for those who do not follow the good path through to its end,
- fortune that came midway fades, so the moon faded;
- and on the dark sea of spreading waves, like the king of blazing gems
- on the chest of the Supreme One, the sun appeared.
What the poem says
This closes the canto of the drinking feast. The moon sets the way good fortune deserts those who do good for a while but do not keep it up to the end. The sun rises out of the dark sea like the Kaustubha jewel, king of gems, shining on the dark chest of Tirumāl.
The second image hints at what is coming. Irāmaṉ is Tirumāl come to earth, and his marriage to Cītai, who is Tirumakaḷ, the goddess who lives on his chest, is now near at hand.