கம்பராமாயணம் 11 · பால 1.11
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பணை முகக் களி யானை - பருத்த முகமும் களிப்பும் கொண்ட யானைகள்; பல மாக்களோடு அணி வகுத்தென ஈர்த்து - பல விலங்குகளோடு அணிவகுத்தது போல இழுத்துக் கொண்டு; இரைந்து ஆர்த்தலின் - ஆரவாரத்தோடு முழங்குதலாலும்; மணி உடைக் கொடி தோன்ற - அழகான கொடிகள் தோன்றுமாறு; வந்து ஊன்றலால் - வந்து தோன்றுதலாலும்; புணரி மேல் பொர - கடலின்மீது படையெடுத்துப் போர் செய்ய போவது போன்றது - செல்வது போலச் சரயு வெள்ளம் காணப்பட்டது.
பொருத்தம் நோக்கிச் 'சரயு வெள்ளம்' என்ற எழுவாய் வருவித்து உரைக்கப்பட்டது. பொருதலை விளக்குவன யானை, பல்வகை மாக்கள் (குதிரைகள்) முழக்கம், கொடி ஆகியவை. சரயுவின் வெள்ளப் பெருக்கில் யானையும் பல்வகை விலங்குகளும் ஆரவாரிக்கும் ஒலியோடு ஈர்க்கப்படுவதாக விளங்கிக் கொள்க; இடையிடையே தாவரக் கொடிகளும் காணப்படுவது இயற்கை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Rutting elephants with broad, great faces, along with many other beasts,
- it dragged along as if drawn up in battle order, roaring and clamouring;
- and because it came on and pressed forward with jewelled banners showing,
- it looked like an army marching out to make war upon the sea.
What the poem says
The flood rushing towards the sea is now pictured as an army marching to attack it. The river sweeps along elephants and many other animals, as an army leads its war elephants and horses in battle order. Its roar is the army's war cry. Creepers carried on its waters stand in for the army's banners, because the Tamil word koṭi means both "creeper" and "flag".