கம்பராமாயணம் 1108 · பால 18.6
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
இலைகுலாவு அயிலினான் அனிகம் - அரசிலை வடிவுடன் திகழும் கூரிய வேற்படையினை ஏந்திய தசரதனின் சேனைக்கு; ஏழ் என உலாம் - ஏழு என்னும் எண்ணிக்கை கொண்டனவாய்; நிலை குலாம் மகரநீர் நெடியமா கடல் எலாம் - நிலைபெற்று விளங்கும், சுறா மீன்கள் உலாவும், நீண்டு அகன்ற கடல்கள் யாவும்; அலகு இல்மாகளிறு, தேர் புரவி, ஆள் என விராய் - அளவற்ற பெரிய யானைகளும் தேர்களும், குதிரைகளும், காலாட்களும் என்னும் நால்வகை வடிவுபெற்றுக் கலந்து; உலகு எலாம் நிமிர்வதே பொருவும் ஒர் உவமை - உலகம் முழுவதிலும் பொங்கிப் பரவி வருவதே ஏற்றதோர் உவமையாகும்.
கணக்கிட இயலாமையாலும், ஆர்ப்பொலியாலும் கடலும் படையும் சமம் ஆயின என்க. “நிமிர்வதே” - ஏகாரம் பிரிநிலை. ஏழ்கடலும் நால்வகைச் சேனை வடிவம் பெற்று, உலகம் முழுவதிலும் பொங்கி மிதிலையை நோக்கி நகர்ந்தது என்பது தயரதன் சேனை வெள்ளத்திற்குப் பொருந்தும் உவமையாம் என்றார். தன்மைத் தற்குறிப்பேற்ற அணி. உயர்வு நவிற்சியுமாம். மகரம் - கடலில் மட்டுமே வாழும் சுறாமீன். “கடல் வாழ் சுறவும்” (தொல். மரபு. 41) என்பார் தொல்காப்பியனார் இது பற்றி. கடலுக்கு “மகராலயம்” எனும் ஒரு பெயர் வட மொழியில் உண்டென்பர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- For the army of the king with the leaf-bladed spear, the only fit comparison
- is this: that all the long, great seas, seven in number, steady in their place, where makaras roam,
- mingling and taking the forms of countless great elephants, chariots, horses and men,
- should rise and spread across the whole world.
What the poem says
The poet looks for a comparison big enough for Tacarataṉ's army and finds only one. Imagine all seven oceans of the world turning into the four arms of an army, elephants, chariots, horses and foot soldiers, and rising up to flood the whole earth on their way to Mitilai.
Like the sea, the army cannot be counted and roars like the waves. The makara, a sea creature like a shark, lives only in the ocean, which is why Sanskrit calls the sea "the home of the makara".