கம்பராமாயணம் 1107 · பால 18.5

Section பால காண்டம் / 18. எதிர்கொள் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மற்று உள கடல்கள் எல்லாம் - (பாற் கடலைத் தவிர) மற்றைய கடல்கள் யாவும்; சங்கு இனம் ஆர்ப்பவந்து சார்வன போல - சங்குகளின் கூட்டம் ஆரவாரம் செய்த வண்ணம் வந்து, (திருப்பாற்கடலை) சேர்வன போன்று; கங்கைநீர் நாடன் சேனை சார - கங்கைபாயும் கோசல நாட்டுத் தசரத மன்னனது சேனைகள் மிதிலை வந்து சேர; மங்கையைப் பயந்த மன்னன் வளநகர் - சீதையை மகளாகப் பெற்ற சனக மன்னனது வளம் மிக்க மிதிலை நகர்; பங்கயத்து அணங்கைத் தந்த பாற்கடல் எதிர்வதேபோல் - தாமரை மலரில் வதியும் திருமகளைத் தந்த திருப்பாற்கடலானது (பிற கடல்களை) எதிர்கொண்டு வர வேற்பது போன்று; அன்று வந்தது - அப்பொழுது, தசரத சேனையினை எதிர்கொண்டு வரவேற்றது.

சீதை திருமகளின் கூறு ஆதலால் அவள் தோன்றிய திருப்பாற் கடலைச் சீதை இப்போது தோன்றியுள்ள மிதிலைக்குப் பொருத்த முற உவமித்தார். தசரத சேனையைப் பிறகடல்கள் அனைத்துமாக உவமித்தலால் அதன் பெருக்கம் தெரிவித்தார். சங்கங்கள் முழங்கச் சேனை எதிர் வருவது, சங்குகள் முழங்கும் கடலுக்கு உவமை. அது பெருமையாலும், ஒலியினாலும் பொருந்தும் உவமையாயிற்று.

சரயு நதிதான், கோசலத்துக்குரிய ஆறு எனினும், கோசல நாடு கங்கை நதி வரையும் பரவியிருத்தலின் “கங்கை நீர் நாடன்” என்றார். இலக்குவனை, “கங்கைக்கு இறைவன்” (கம்ப. 1718) என்பார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the army of the lord of the Gaṅgā's land drew near, as if all the other seas there are
  2. were coming on with their conches roaring,
  3. then, like the ocean of milk that gave forth the lady of the lotus coming to meet them,
  4. the rich city of the king who fathered that maiden came forth.

What the poem says

Tacarataṉ's army approaches with conches blaring, as if all the oceans of the world were rolling in. The city of Mitilai comes out to meet it like the ocean of milk.

The comparison is exact. The goddess Tirumakaḷ rose from the ocean of milk, and Cītai, who is that goddess on earth, has appeared in Mitilai. Tacarataṉ is called lord of the Gaṅgā's land because his kingdom of Kōcalam stretched as far as that river, though its own river is the Carayu.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kaṅkai nīr nāṭaṉ cēṉai, maṟṟu uḷa kaṭalkaḷ ellām
caṅku iṉam ārppa vantu cārvaṉa pōlac cāra,
paṅkayattu aṇaṅkait tanta pāṟkaṭal varuvatēpōl,
maṅkaiyaip payanta maṉṉaṉ vaḷa nakar vantatu aṉṟē.