கம்பராமாயணம் 1106 · பால 18.4

Section பால காண்டம் / 18. எதிர்கொள் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வந்தனன் அரசன் என்ன மனத்து எழும் உவகை பொங்கக்,
கந்து அடு களிறும் தேரும் கலின மாக் கடலும் சூழச்,
சந்திரன் இரவிதன்னைச் சார்வது ஓர் தன்மை தோன்ற,
இந்திர திருவன் தன்னை எதிர்கொள்வான் எழுந்து சென்றான்.

பொருள் · Meaning in Tamil

வந்தனன் அரசன் என்ன - தசரத மன்னன் வந்தனன் என்ற (செய்தி கேட்ட சனக மன்னன்); மனத்து எழும் உவகை பொங்க - தன் உள்ளத்தில் எழுந்த உவகை, உடலில் (மெய்ப்பாடாய்) பெருகாநிற்க; கந்து அடுகளிறும் தேரும் கலினமாக் கடலும் சூழ - கட்டுத் தறிகளை முறிக்கவல்ல ஆண்யானைகளும், தேர்ப்படைகளும், கடிவாளம் இட்ட குதிரைகளும் ஆகிய சேனைகள் சமுத்திரம் போல் தன்னைச் சுற்றிவர; சந்திரன் இரவிதன்னைச் சார்வதோர் தன்மை தோன்ற - சந்திரன் சூரியனை வந்தடைகின்ற தன்மையினை ஒப்ப; இந்திர திருவன் தன்னை எதிர் கொள்வான் எழுந்து வந்தான் - தேவேந்திர உலகத்தின் செல்வங்களைப் போன்ற செல்வங்களையுடைய தசரதனை, எதிர்கொண்டு அழைக்கும் பொருட்டுப் புறப்பட்டு வந்தான்.

சூரிய குலத்துத் தசரதனை, சந்திர குலத்துச் சனகன் வரவேற்க வருகின்றான் ஆதலின், “சந்திரன் இரவிதன்னைச் சார்வதோர் தன்மை தோன்ற” என அழகுறக் கூறினார். தசரதனை “இந்திரன் என” (கம்ப. 318) முன்னும் உவமிப்பார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Hearing 'The king has come,' with the joy that rose in his heart overflowing,
  2. with a sea of tuskers that break their tethering posts, of chariots and bridled horses, around him,
  3. so that it looked as though the moon were going to meet the sun,
  4. he rose and came out to welcome the king whose fortune was like Intiraṉ's.

What the poem says

News reaches Caṉakaṉ that Tacarataṉ has arrived, and he is overjoyed. He rides out to welcome him with a great host of elephants, chariots and horses.

Tacarataṉ belongs to the Solar dynasty and Caṉakaṉ, in this telling, to the Lunar one. So the meeting looks like the moon going out to meet the sun. Tacarataṉ's wealth is compared to that of Intiraṉ, king of the gods.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vantaṉaṉ aracaṉ eṉṉa maṉattu eḻum uvakai poṅka,
kantu aṭu kaḷiṟum tērum kaliṉa māk kaṭalum cūḻac,
cantiraṉ iravitaṉṉaic cārvatu ōr taṉmai tōṉṟa,
intiratiruvaṉ taṉṉai etir koḷvāṉ eḻuntu vantāṉ.