கம்பராமாயணம் 1110 · பால 18.8
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
முளரியாள் - செந்தாமரை மலரில் வதியும் திருமகள்; பகர் மடிஇலா அரசினான் - (புகழ்ந்து) கூறப்படுகிற சோம்பல் இல்லாத அரசாட்சி செய்யும் தசரத மன்னனுடைய; கொடி உளாளோ - கொடியில் உள்ளாளோ?; தனிக் குடை உளாளோ? - ஒப்பற்ற வெண் கொற்றக் குடையிலே இருக்கின்றாளோ; குலப்படி உளாளோ - பரம்பரை பரம்பரையாக வருகின்ற அவனது இராச்சியத்தில் இருக்கின்றாளோ; கடல் படை உளாளோ? - கடல் போன்ற அவன் சேனையிலே இருக்கின்றாளோ?; மார்பு உளாளோ? - அம் மன்னர் மன்னனின் மார்பிடத்தே இருக்கின்றாளோ?; வளர் முடி உளாளோ? - அழகு வளரும் அவன் மணிமகுடத்தில் இருக்கின்றாளோ?; தெரிந்து உணர்கிலாம் - திருமகள் இருக்குமிடம் இன்னது எனத் தெளிந்தறியக் கூடவில்லை.
மன்னர்களிடம் திருமகள் வாசம் புரியத்தக்க இவையனைத்திலும் ஏதோ ஒரிடத்தில் வசிப்பது அவள் வழக்கம்; தசரதன் ஆட்சியில் அவள் அனைத்திலும் உள்ளாள் என்றவாறு. “மடியிலான் தாள் உளாள் தாமரையினாள்” (திருக். 617) எனும் அருமைத் திருக்குறளின் கவிதை விளக்க வுரையாவது இது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Is she on his banner? Is she on his peerless parasol? Is she in his
- ancestral realm? Is she in his sea of an army? Is she on the chest
- of the king whose rule is praised as never slack? Is she on his
- lofty crown? We cannot make out where she is, the lady of the lotus.
What the poem says
Tirumakaḷ, the goddess of fortune who sits on a lotus, was believed to dwell with kings, in one or another of the signs of their royalty: the banner, the white parasol, the kingdom, the army, the king's chest or his crown.
The poet asks which of these she has chosen in Tacarataṉ's case and cannot tell, because she seems to be in all of them at once. The verse is a poetic gloss on a couplet of the Tirukkuṟaḷ: the lady of the lotus lives at the feet of the man who is never idle.