கம்பராமாயணம் 1121 · பால 18.19

Section பால காண்டம் / 18. எதிர்கொள் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இன்னவாறு இருவரும் இனியவாறு ஏக - இவ்வாறு, (தசரதன், சனகன் ஆகிய) இருவரும், இனிதே மிதிலையையடைய; தன்னையே அனையவன் - தனக்கு உவமை தானே ஆகி நின்றவனும்; தழலையே அனையவன் பொன்னின் வார்சிலை - நெருப்பினை ஒத்த நிறத்தினன் ஆன சிவ பெருமானின் அழகிய வில்; இறப் புயம் நிமிர்ந்து அருளினான் - இற்று விழுமாறு தோள் ஆற்றலால் எடுத்தருளியவனுமான இராமபிரான்; அத்துன்னுமா நகரின் நின்று எதிர்வரத் துன்னினான் - அழகு நெருங்கும் மாநகராகிய மிதிலையிலே நின்று, எதிர் வரும் தந்தையை வரவேற்க நெருங்கினான்.

“தன்னையே அனையவன்” - “தனக்கு உவமை இல்லாதான்” (திருக். 7) “தன் ஒப்பார் இல்அப்பன்” (திருவாய். 0:3:7) எனும் ஆன்றோர் வாக்குகளை நினைப்பிப்பது. சிவன் கையில் ஏந்திய பொன்மயமான மேரு வில்லானது ஆதலான் “தழலையே அனையவன் பொன்னின் வார்சிலை” என்றார். “வடவரை வார்சிலை ஏங்கும் மாத்திரத்து இற்று இரண்டாய் விழ வீங்குதோள்” (கம்ப. 5089) ஆதலின், “சிலை இறப்புயம் நிமிர்ந்து அருளினான்” என்றார். தயரதன் இங்கு வருதற்கு அப்புயமே காரணம் ஆதலான் அதனையே இராமனுக்கு அடையாக்கினார். வில் ஒடித்த புயத்தைக் காட்டியவாறு, வீதியில் வருகிறான் தந்தையை வரவேற்கத் தசரத ராமன் என்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the two went on in this pleasant way, from that thronged great city
  2. he drew near, coming out to meet them:
  3. he who has no likeness but himself, he who, so that the long golden bow of the one like fire
  4. would break, graciously raised his shoulders high.

What the poem says

While the two kings ride on together, Irāmaṉ comes out of the crowded city of Mithilā to meet his father.

He is described by two epithets: he is like no one but himself, an echo of older devotional phrases for God as the one without equal; and he is the one whose mighty shoulders broke the golden bow of Civaṉ, the god whose form is like fire. The broken bow is mentioned here because that feat is the very reason Tacarataṉ has come to Mithilā, for Irāmaṉ's wedding.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iṉṉavāṟu, iruvarum iṉiyavāṟu ēka, at
tuṉṉu mā nakariṉ niṉṟu etirvarat tuṉṉiṉāṉ;
taṉṉaiyē aṉaiyavaṉ, taḻalaiyē aṉaiyavaṉ,
poṉṉiṉ vār cilai iṟap puyam nimirntu aruḷiṉāṉ.