கம்பராமாயணம் 1124 · பால 18.22

Section பால காண்டம் / 18. எதிர்கொள் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

காவியும் குவளையும் கடிகொள் காயாவும் ஒத்து - நீலோற்பல மலரையும், கருங்குவளை மலரையும் வாசனைகொண்ட காயாம் பூவையும் போன்று; ஓவியம் சுவைகெடப் பொலிவதோர் உருவொடு - சித்திரத்தில் எழுதும் உருவம் இனிமையின்றிப் போகும்படி விளங்குகின்ற ஒப்பற்ற வடிவத்துடனே; தேவரும் தொழுகழல் சிறுவன் - தேவர்களும் வந்து வணங்குதற்குரிய திருவடிகளையுடைய (சக்கரவர்த்தித் திருமகனான) இராமன்; முன் பிரிவது ஓர் ஆவிவந்தென்ன - இராமனைத் தா என்று விசுவாமித்திரர் கேட்டபோது (தசரதனைவிட்டு) நீங்கிய உயிர் (மீண்டும் அவனுடம்பில்) வந்து சேர்ந்தாற்போலே; அரசன் மாடு அணுகினான் - தசரதச் சக்கரவர்த்தியிடம் வந்து எய்தினான்.

“தேவரும் தொழு கழல் சிறுவன்” என்பதனால், தெய்வத்தன்மை சுட்டியதோடு, காட்சியை நடையோவியப் படுத்துகிறார். முன்பு - “நின்புதல்வர் நால்வரிலும் கரிய செம்மல் ஒருவனைத் தந்திடுதி என உயிர் இரக்கும் கடுங்கூற்றின் (விசுவாமித்திரர்) உளையச் சொன்ன” (கம்ப. 324) போது என விரிக்க. விசுவாமித்திரரிடம் தசரதன் இராம லக்குவரைக் கையடைப்படுத்திய போது, “மன்னன் இன்னுயிர் வழிக்கொண்டால் என” (கம்ப.) என்று கவிஞர் பிரான் உவமித்திருந்ததை மறவாமல் நினைவுகூர்ந்து அன்றுபிரிந்த உயிரை இன்று இணைக்கின்றார் என்க. “ஓவியத்து எழுத ஒண்ணா உருவத்தாய்” (கம்ப. 4020) எனப்படுபவன் ஆதலின், “ஓவியம் சுவைகெடப்பொலிவதோர் உருவொடே” என்றார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Like the blue water-lily, the dark kuvaḷai and the fragrant kāyā flower,
  2. with a form whose splendour robs any painting of its charm,
  3. the boy whose feet even the gods worship, like a life that had once departed
  4. coming back again, came and drew near to the king.

What the poem says

Irāmaṉ, dark-hued like blue lotus, water-lily and kāyā blossom, so beautiful that any painted likeness would look dull beside him, approaches his father.

His coming is like the return of Tacarataṉ's own life. When the sage Vicuvāmittiraṉ took the boys away, the poet had said the king's life seemed to leave with them. Now the reunion gives that life back to him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kāviyum kuvaḷaiyum kaṭi koḷ kāyāvum ottu,
ōviyam cuvai keṭap polivatu ōr uruvoṭē,
tēvarum toḻu kaḻal ciṟuvaṉ, muṉ pirivatu ōr
āvi vanteṉṉa vantu, aracaṉmāṭu aṇukiṉāṉ.